இந்தியா

VIDEO: பட்டப்பகலில் நடுரோட்டில் 18 முறை கத்தியால் குத்தி கழுத்தை அறுத்து நடந்த கொலை

Published On 2024-12-28 09:28 GMT   |   Update On 2024-12-28 09:28 GMT
  • இறுதியில் அவரது கழுத்தை அறுத்தார் என்று டிசிபி அபினய் விஸ்வகர்மா கூறினார்
  • இருவருக்கும் இடையில் முன் விரோதம் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் குடிபோதையில் நடந்த சிறு தகராறு கொடூர கொலையில் முடிந்துள்ளது. 

வினோத் ரத்தோர், 35, நேற்று [வெள்ளிக்கிழமை] மதியம் தெருவில் நடந்து கொண்டிருந்தபோது, பிரமோத் சாய் யாதவ், 29, அவரை பின்னால் இருந்து வந்து தரையில் தள்ளினார்.

வினோத் மீது பிரமோத் கத்தியால் தாக்கினார். வினோத் வலியால் துடித்தபோது, பிரமோத் தொடர்ந்து கத்தியால் குத்தினார், இறுதியில் அவரது கழுத்தை அறுத்தார். இதில் படுகாயம் அடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று டிசிபி அபினய் விஸ்வகர்மா கூறினார்

கொலைக்குப் பிறகு பிரமோத், குல்கர்னி  தனது வீட்டிற்கு தப்பிச் சென்றார், அங்கு உள்ளூர்வாசிகள் அவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், பிரமோத் குற்றத்தின் போது தானும் வினோத்தும் குடிபோதையில் இருந்ததாக தெரிவித்தார்.

சிறு வாக்குவாதம் ஏற்பட்டு, வினோத், பிரமோத்தை மடிக்கக்கூடிய கத்தியால் தாக்கியதில், அவரது விரலில் லேசான காயம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரமோத், கத்தியை பறித்து, வினோத்தை குத்தி கொலை செய்துள்ளார்.

இருவருக்கும் இடையில் முன் விரோதம் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட மடிப்பு கத்தியை பறிமுதல் செய்து பிரமோத் மீது பிஎன்எஸ் பிரிவு 103 இன் கீழ் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

Tags:    

Similar News