இந்தியா

ஆம் ஆத்மியின் மக்கள் நலத்திட்டங்களை நாசப்படுத்த பாஜக, காங்கிரஸ் முயற்சி: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

Published On 2024-12-28 10:41 GMT   |   Update On 2024-12-28 10:41 GMT
  • பாஜக-வுக்கு நேரடியாக மோத தைரியம் இல்லாததால், காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீக்ஷித் மூலம் புகார் அளிக்க வைத்துள்ளனர்.
  • ஆம் ஆத்மியை தடுத்து நிறுத்த பாஜக மற்றும் காங்கிரஸ் இணைந்து வேலை செய்கின்றன.

டெல்லியில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே ஆம் ஆத்மி வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் டெல்லியில் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் 2100 ரூபாய் வழங்கப்படும். முதியவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் ஆகிய இரண்டு முக்கிய திட்டங்களை அறிவித்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என காங்கரிஸ் கட்சி தலைவர் சந்தீப் தீக்ஷித் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஆம் ஆத்மியின் மக்கள் நலத்திட்டங்களை நாசப்படுத்த பாஜக, காங்கிரஸ் முயற்சி செய்வதாக கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறியதாவது:-

பாஜக-வுக்கு நேரடியாக மோத தைரியம் இல்லாததால், காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீக்ஷித் மூலம் புகார் அளிக்க வைத்துள்ளனர். ஆம் ஆத்மியை தடுத்து நிறுத்த பாஜக மற்றும் காங்கிரஸ் இணைந்து வேலை செய்கின்றன.

நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் 2100 ரூபாய் வழங்குவோம், மூத்த குடிமக்களுக்கு (60 வயதை கடந்தவர்கள்) இலவசமக சிகிச்சை அளிப்போம் எனத் தெரிவித்தேன். இரண்டு திட்டங்களும் மக்களுக்கு பயன்பெறும் வகையிலானது. லட்சக்கணக்கான மக்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர். இது பாஜக-வுக்கு பதற்றத்தை ஏற்பட்டுள்ளது.

இரண்டு திட்டங்களும் வாக்குறுதிகள். செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் அல்ல. இதில் விசாரணைக்கை என்ன இருக்கிறது?. இந்த இரண்டு திட்டங்களும் தேர்தலில் வெற்றி பெற்றால் நிறைவேற்றுவோம் என அறிவிக்கப்பட்டவை.

பெண்கள் மட்டும் மூத்த குடிமக்களுக்கான நலத்திட்டங்களை பாஜக விரும்பவில்லை. அவர்கள் பெண்களுக்கு எதிரானவர்கள் அல்ல. பெண்களின் வளர்ச்சிகளை அவர்கள் விரும்பவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தால் டெல்லியை வாழ தகுதியற்றதாக மாற்விடும். டெல்லி மக்களுக்காக மீண்டும் ஜெயிலுக்கு செல்ல தயார். ஆனால் மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன்

இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News