இந்தியா

ரொட்டி சுட்டுத் தர தாமதித்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகன்.. உடனே வேறு ஒருவருடன் நடந்த திருமணம்

Published On 2024-12-28 11:56 GMT   |   Update On 2024-12-28 12:23 GMT
  • திருமணத்துக்கு முந்தைய இரவு நிகழ்ச்சியில் சாப்பிடும்போது ரொட்டிகள் சுட்டு வழங்க தாமதமானது
  • மணமகன் உடனே தனது உறவினரின் பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

திருமணத்தில் உணவு வழங்க தாமதமானதால் மணமகன் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தில் உள்ள ஹமித்பூர் கிராமத்தில் கடந்த டிசம்பர் 22 அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. திருமணத்துக்கு முந்தைய இரவு நிகழ்ச்சியில் சாப்பிடும்போது ரொட்டிகள் சுட்டு வழங்க தாமதமானதாக  கூறி மணமகன் மெஹ்தாப் மற்றும் அவரது உறவினர்கள் திருமணத்தையே நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினர்.

அவர்களை தடுக்க மணமகள் வீட்டார் முயன்றபோதும் அவர்கள் விடாப்பிடியாக அங்கிருந்து வெளியேறினர். அதன்பின் அந்த மணமகன் உடனே தனது உறவினரின் பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இதனை அறிந்த மணமகளின் குடும்பத்தினர் உள்ளூர் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாததால் டிசம்பர் 24 ஆம் தேதி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். திருமணத்திற்காக ரூ.7 லட்சம் செலவிட்டதாகவும், அதில் ரூ.1.5 லட்சம் வரதட்சணையாக மணமகன் வீட்டிற்கு அனுப்பப்பட்டதாகவும் மணமகள் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.  

Tags:    

Similar News