இந்தியா

VIDEO: டிக்கெட் எடுக்க பணம் இல்லாமல் ரெயிலுக்கு அடியில் தொங்கியபடி 290 கி.மீ. பயணித்த ஆசாமி

Published On 2024-12-27 11:08 GMT   |   Update On 2024-12-27 11:08 GMT
  • ரெயிலில் இரு பெட்டிகளுக்கு நடுவேயான சக்கர பகுதியில் ஒளிந்து கொண்டுஅவர் பயணித்துள்ளார்.
  • S4 கோச்சின் கீழ் ஆபத்தான முறையில் அவர் பதுங்கியிருந்ததை ஊழியர்கள் கண்டனர்.

மத்திய பிரதேசத்தில் ரெயிலுக்கு டிக்கெட் எடுக்க பணம் இல்லாமல் நபர் ஒருவர் ரெயிலுக்கு அடியில் 290 கிலோமீட்டர் தொங்கியபடி பயணித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் இடார்ச்சி நிலையத்தில் இருந்து ஜபல்பூர் வரை சுமார் 290 கிலோமீட்டர் தூரம் ரெயிலில் இரு பெட்டிகளுக்கு நடுவேயான சக்கர பகுதியில் ஒளிந்து கொண்டுஅவர் பயணித்துள்ளார்.

ஜபல்பூர் ரெயில் நிலையம் அருகே கேரேஜ் மற்றும் வேகன் (C&W) துறை ஊழியர்கள் நடத்திய ரோலிங் சோதனையின் போது ரெயிலின் S4 கோச்சின் கீழ் ஆபத்தான முறையில் அவர் பதுங்கியிருந்ததை ஊழியர்கள் கண்டனர்.

அவர் ரயிலுக்கு அடியில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆர்பிஎஃப் அதிகாரிகள் உடனடியாக சம்பவ விரைந்து அந்த நபரை காவலில் எடுத்து அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். 

Tags:    

Similar News