சுசுகி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசுகி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
- ஒசாமு சுசூகி மாருதி 800 மாடல் காரை அறிமுகம் செய்து ஆட்டோமொபைல் உலகில் புரட்சி ஏற்படுத்தியவர்.
- ஒசாமு சுசூகி இந்தியா மீது அதிகமான பாசம் கொண்டிருந்தார்
சுசுகி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசுகி (94) நேற்று காலமானார்.
ஒசாமு சுசுகி எளிய மக்களும் பயன்பெறும் வகையில் மாருதி 800 மாடல் காரை அறிமுகம் செய்து ஆட்டோமொபைல் உலகில் புரட்சி ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஒசாமு சுசுகி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "உலகளாவிய வாகனத் துறையில் புகழ்பெற்ற நபரான ஒசாமு சுசுகியின் மறைவு ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. அவரது தலைமையின் கீழ், சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் ஒரு உலகளாவிய சக்தியாக மாறியது. அவர் இந்தியா மீது அதிகமான பாசம் கொண்டிருந்தார். மாருதி உடனான அவரது ஒத்துழைப்பு இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புரட்சியை ஏற்படுத்தியது. அவரது குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும், அவரை நேசிக்கும் எண்ணற்றவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.