என் மலர்
- குஜராத் அணிக்கு எதிராக விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் விக்னேஷ் புத்தூர் இடம்பெறவில்லை.
- சிஎஸ்கே அணியின் ருதுராஜ், ஷிவம் துபே, தீபக் ஹூடா ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியவர்.
அகமதாபாத்:
ஐ.பி.எல். தொடரில் சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருதுராஜ், ஷிவம் துபே மற்றும் தீபக் ஹூடா ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் பெற்றவர் விக்னேஷ் புத்தூர்.
இதற்கிடையே, மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் விக்னேஷ் புத்தூர் இடம்பெறவில்லை.
இந்நிலையில் சி.எஸ்.கே. அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரமாக விளையாடிய விக்னேஷ் புத்தூர் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, விக்னேஷ் புத்தூர் நீக்கப்பட்டதற்கு எதிராக இணைய தளங்களில் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன.
இது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் ஓர் அதிர்ச்சியூட்டும் முடிவு. ரோகித்தின் மும்பை இந்தியன்ஸ் அணியை மிஸ் செய்கிறேன் என ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.
விக்னேஷ் புத்தூரை நீக்கி மும்பை இந்தியன்ஸ் அணி தவறு செய்ததால், குஜராத் அணியின் விக்கெட்டுகளை வீழ்த்துவது கடினமாகிவிட்டது எனவும் பதிவிட்டுள்ளனர்.
- தலைநகர் நேபிடா, மண்டலாய் உள்பட 6 மாகாணங்களில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.
- இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 1,600க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர்.
புதுடெல்லி:
மியான்மர்-தாய்லாந்தில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மண்டலே நகரை மையமாக கொண்டு நேற்று காலை 11.50 மணிக்கு ரிக்டர் அளவில் 7.7 ஆக நிலநடுக்கம் உண்டானது.
இதனால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதில் ஏராளமான கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்தன. குறிப்பாக மியான்மரில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. தலைநகர் நேபிடா, மண்டலாய் உள்பட 6 மாகாணங்களில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 1,600க்கும் மேற்பட்ட மக்கள் பலியானதாகவும், 2000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ல மியான்மர் நாட்டுக்கு ஆபரேஷன் பிரம்மா திட்டம் மூலம் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரன் தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஆபரேஷன் பிரம்மா திட்டம் தொடர்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு சேவைகள் மற்றும் 60 டன் நிவாரணப் பொருட்கள் உள்பட 118 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய ராணுவ கள மருத்துவமனை பிரிவுடன் இரண்டு C-17 விமானங்கள் மியான்மரில் தரையிறங்கியுள்ளன. இவற்றுடன், இந்தியாவில் இருந்து 5 நிவாரண விமானங்கள் மியான்மரில் தரையிறங்கியுள்ளன என பதிவிட்டுள்ளார்.
- முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 196 ரன்களைக் குவித்தது.
- அடுத்து ஆடிய மும்பை அணி 160 ரன்களை மட்டுமே எடுத்தது.
அகமதாபாத்:
நடப்பு ஐபிஎல் தொடரின் 9-வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 63 ரன்கள் எடுத்தார். பட்லர் 24 பந்தில் 39 ரன்னும், சுப்மன் கில் 27 பந்தில் 38 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
மும்பை அணி சார்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
சூர்யகுமார் யாதவ் 28 பந்தில் 48 ரன்னும், திலக் வர்மா 39 ரன்னும் எடுத்து வெளியேறினர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் 36 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. மும்பை அணியின் 2வது தோல்வி இதுவாகும்.
குஜராத் அணி சார்பில் சிராஜ், சாய் கிஷோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்.
- நான் தேசிய ஜனநாயக கூட்டணிக்காக பீகாரில் பிரசாரம் செய்வேன் என்றார்.
பாட்னா:
இந்திய குடியரசுக் கட்சி தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே பீகார் மாநிலத்தின் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று முதல் மந்திரி நிதிஷ்குமாரைச் சந்தித்தார். அதன்பின், செய்தியாளர் சந்திப்பில் ராம்தாஸ் அதவாலே பேசியதாவது:
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். நிதிஷ்ஜி ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலுஜியை விட நிச்சயமாக ஆரோக்கியமானவர். நான் இருவருடனும் நண்பர்களாக இருந்திருக்கிறேன்.
நிதிஷ்ஜி இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு இருப்பார் என நினைக்கிறேன். பீகாரில் எனது கட்சி வலுவாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நான் தேசிய ஜனநாயக கூட்டணிக்காக பிரசாரம் செய்வேன்.
பிரதமர் நரேந்திர மோடி ஜவகர்லால் நேருவின் சாதனையை முறியடித்து, தொடர்ந்து 4-வது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வார்.
ஊழல் இல்லாத அரசாங்கத்தை நடத்தி வரும் நரேந்திர மோடி தலைமையிலான குழுவில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.
அவரது ஆட்சிக் காலத்தில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறுவதற்கான பாதையில் இருக்கிறோம்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு திரும்பியதன் மூலம் மோடி ஏற்கனவே நேருவின் சாதனையை சமன் செய்துள்ளார். அவர் நேருவின் சாதனையை முறியடித்து நான்காவது முறையாக ஆட்சியை அனுபவிப்பார் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
- ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் ஊழியர்கள் 782 பேர் சார்பாக குழு ஒன்று என்னை பாராளுமன்றத்தில் சந்தித்தது.
- இதில் இரண்டு சம்பவங்களில் தற்கொலைகளும் நடந்துள்ளன.
பெருநிறுவனங்களுக்கு வங்கிக்கடன் தள்ளுபடி குறித்து மோடி அரசின் மீது ராகுல் காந்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் ஊழியர்கள் உடனான தனது சந்திப்பு வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், " பாஜக அரசாங்கம் அதன் பில்லியனர் நண்பர்களுக்காக ரூ.16 லட்சம் கோடி மதிப்புள்ள கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது.
நண்பர்களுக்கு சலுகை, ஒழுங்குமுறை தவறிய நிர்வாகத்துடன் இணைந்து, இந்தியாவின் வங்கித் துறை நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இந்தச் சுமை இறுதியில் மன அழுத்தம் மற்றும் நெருக்கடிகளைத் தாங்கும் இளம் பணியாளர்கள் மீதே திணிக்கப்படுகிறது.

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் ஊழியர்கள் 782 பேர் சார்பாக குழு ஒன்று என்னை பாராளுமன்றத்தில் சந்தித்தது. பணியிட துன்புறுத்தல், கட்டாய பணியிட மாற்றம், என்ஏபி விதிகளை மீறியவர்களுக்கு நெறிமுறையற்று வழங்கப்பட்ட கடன்களை அம்பலப்படுத்தியதற்காக பழிவாங்கல் நடவடிக்கை, பணிநீக்கம் என பல பிரச்சனைகளை அவர்கள் தெரிவித்தனர். இதில் இரண்டு சம்பவங்களில் தற்கொலைகளும் நடந்துள்ளன.
இந்தப் பிரச்சினை ஐசிஐசிஐ வங்கியைத் தாண்டி நாடு முழுவதும் உள்ள பல வங்கி ஊழியர்களை பாதிக்கிறது. பாஜக அரசின் தவறான பொருளாதாரத் நிர்வாகம், மனித உயிரைப் பறிக்கிறது. இது நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான நேர்மையாக பணிபுரியும் ஊழியர்களை பாதிக்கும் ஒரு தீவிரமான கவலைக்குரிய விஷயம்.
இந்த தொழிலாள வர்க்கதினருக்கு நீதி கிடைக்க காங்கிரஸ் கட்சி இந்த பிரச்சினையை முழு தீவிரத்துடன் கையாளும்" என்று தெரிவித்தார். மேலும் ஏப்ரல் 7 ஆம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற உள்ள 'அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாட்டில்' கலந்து கொள்ள அனைவருக்கும் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
- எளியவன் உழைத்தாலும் கூலியைக் கொடுக்காமல் வயிற்றில் அடி என்கிறது ஒன்றிய அரசின் புதுமொழி.
- பைசா கூட ஒதுக்காத ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுக்க திமுக போராட்டம் நடத்தியது.
தி.மு.க எம்.பி கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
"உழைப்பவன் கூலியை வியர்வை உலர்வதற்கு முன்பு கொடுத்துவிடு" எனச் சொல்கிறது ஒரு பொன்மொழி.
ஆனால், எளியவன் உழைத்தாலும் கூலியைக் கொடுக்காமல் வயிற்றில் அடி என்கிறது ஒன்றிய அரசின் புதுமொழி.
100 நாள் வேலைத் திட்டத்திற்கான சம்பளப் பாக்கி 4,034 கோடி ரூபாயை நிறுத்தி வைத்து கொடுங்கோல் ஆட்சியாகவே மாறிவிட்டது ஒன்றிய அரசு.
வறுமையின் காரணமாக 100 நாள் வேலையில் இணைந்து உழைப்பவர்கள் அனைவரையும் ஊழல்வாதிகள் போலச் சித்தரித்து ஊதியப் பணத்தைக் கொடுக்க மாட்டோம் என்பது கொடுங்கோல் ஆட்சியில் கூட நடக்காதது.
ஏழைகள் உழைப்பிற்குக் கூலி கொடுக்க மனமில்லாத ஒன்றிய பாஜக அரசு, உழைக்கும் மக்களையே ஊழல்வாதிகள் என முத்திரை குத்த தமிழ்நாடு பாஜகவினர் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்.
100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை ஒதுக்கச் சொல்லி முதலமைச்சர் அவர்கள் கடிதம் எழுதி வலியுறுத்தினார்; நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் திமுக கூட்டணி உறுப்பினர்கள் குரல் எழுப்பினார்கள்.
பைசா கூட ஒதுக்காத ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுக்க திமுக போராட்டம் நடத்தியது. மோடி அரசுக்கு எதிரான போராட்டத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தவிக்கிறது கமலாலயம்!
தமிழ்நாட்டின் ஏழைகள் ஊதியமின்றி தெருவில் நிற்கும் போது ஒன்றிய அரசிடம் போராடி பணத்தைப் பெற்றுத் தருவதுதானே தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களின் கடமையாக இருக்க வேண்டும்?
கல்வி நிதி, பேரிடர் நிதியை எல்லாம் தராத ஒன்றிய அரசு, இப்போது 100 நாள் வேலை பணியாளர்களின் ஊதியத்தை நிறுத்தி அவர்களைப் பட்டினி போடுகிறது.
உழைப்பை உறிஞ்சிக்கொண்டு ஊதியத்தைக் கேட்பவர்களையே கொச்சைப்படுத்தும் பாஜகவினருக்குத் தமிழ்நாட்டு மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 1002 பேர் பலியாகி உள்ளதாகவும் 2376 பேர் காயம் அடைந்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
- ஆப்கானிஸ்தானிலும் இன்று அதிகாலை 4.7 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியிருந்தது
மியான்மர்-தாய்லாந்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மண்டலே நகரை மையமாக கொண்டு நேற்று காலை 11.50 மணிக்கு ரிக்டர் அளவில் 7.7 ஆக நிலநடுக்கம் உண்டானது.
பின்னர் 12 நிமிடம் கழித்து மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் (ரிக்டர் அளவு 6.4) ஏற்பட்டது. அதே அளவுக்கு அண்டை நாடான தாய்லாந்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து நிலஅதிர்வுகள் உண்டானது. கட்டடங்கள் பல தரைமட்டமாகின.
இன்று காலை மியான்மரின் ராணுவ ஆட்சிக்குழு வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 1000-த்தை தாண்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. 1002 பேர் பலியாகி உள்ளதாகவும் 2376 பேர் காயம் அடைந்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் மியான்மரில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மாலை 04.30 மணியளவில் மியான்மரில் மீண்டும் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. மாண்டலே நகரை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக ஆப்கானிஸ்தானிலும் இன்று அதிகாலை 4.7 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- சாய் சுதர்சன் அரைசதம் விளாசினார்.
- கடைசி 3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்தது குஜராத் டைட்டன்ஸ்
ஐபிஎல் 2025 சீசனின் 9-ஆவது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடினர். இதனால் குஜராத் அணி பவர்பிளேயான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் குவித்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஸ்கோர் 8.3 ஓவரில் 78 ரன்னாக இருக்கும்போது சுப்மன் கில் 27 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சாய் சுதர்சன் உடன் ஜாஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். சாய் சுதர்சன் 33 பந்தில் அரைசதம் அடித்தார். பட்லர் 24 பந்தில் 39 ரன் விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஷாருக்கான் 9 ரன்னில் ஏமாற்றம் அளித்து வெளியேறினார். அப்போது குஜராத் 15.3 ஓவுரில் 146 ரன்கள் எடுத்திருந்தது. குஜராத் அணி 10.5 ஓவரில் 100 ரன்னையும், 15.5 ஓவரில் 150 ரன்னையும் கடந்தது.
4-ஆவது விக்கெட்டுக்கு சாய் சுதர்சன் உடன் ரூதர்போர்டு ஜோடி சேர்ந்தார். 17-ஆவது ஓவரில் 2 சிக்சருடன் குஜராத் அணிக்கு 19 ரன்கள் கிடைத்தன.
18-ஆவது ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். இந்த ஓவரில் சாய் சுதர்சன் ஆட்டமிழந்தார். குஜராத் ஒரு சிக்சருடன் 9 ரன்கள் அடித்தது. சாய் சுதர்சன் 41 பந்தில் 63 ரன்கள் சேர்த்தார்.
19-ஆவது ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ராகுல் டெவாட்டியா ரன்அவுட் ஆனார். அடுத்த பந்தில் ரூதர்போர்டு ஆட்டமிழந்தார். ரபாடா ஒரு சிக்ஸ் அடிக்க, குஜராத் 2 விக்கெட்டை இழந்து 7 ரன்கள் அடித்தது.
கடைசி ஓவரை சத்தியநாராயண ராஜூ வீசினார். குஜராத் இந்த ஓவரின் ஒரு விக்கெட்டை இழந்தது, ஆனால் ஒரு சிக்சருடன் 10 ரன்கள் அடித்தது. இதனால் குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்துள்ளது.
பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.
- அதன் பிறகுதான் அவர் தனது கடையைத் திறக்க அனுமதிக்கப்படுவார்.
- அவரை சுத்தப்படுத்துவதாகக் கூறி இந்து அமைப்பினர் அவர்மீது கங்கை நீரைத் தெளித்திருக்கின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் மாமு பன்ஜா பகுதியை சேர்ந்தவர் சுனில் ரஜனி. இவர் மின்சாரப் பொருட்களை விற்கும் கடையை நடத்தி வருகிறார்.
இந்துவான இவர் தனது முஸ்லீம் நண்பர்களுடன் சேர்ந்து கடந்த மார்ச் 27 ஆம் தேதி உள்ளூர் மசூதியில் மாலை தொழுகையில் ஈடுபட்டிருக்கிறார். இதை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட அது வைரலானது. இதைத்தொடர்ந்து இந்து அமைப்புகள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், அந்தப் பகுதியில் உள்ள பாஜகவின் இளைஞர் பிரிவான பாரதிய பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் (BJYM) உள்ளூர் தலைவரான மோனு அகர்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், சுனில் ரஜனி இந்து மதத்தின் புனிதத்தை பாழ்படுத்தியதாகவும் அதற்கு பொது மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் அப்பகுதியில் உள்ள கோயிலில் அவரை வைத்து பரிசுத்தப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் அதன் பிறகுதான் அவர் தனது கடையைத் திறக்க அனுமதிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.
மேலும் ரஜனி மசூதியில் இருந்து வெளியே வந்தபோது அவரை சுத்தப்படுத்துவதாகக் கூறி இந்து அமைப்பினர் அவர்மீது கங்கை நீரைத் தெளித்திருக்கின்றனர். ஆர்வத்தின் பேரிலேயே தான் மசூதிக்கு சென்றதாக சுனில் தெரிவித்துள்ளார்.
- 18 வயது பெண் சொந்த வீடு வாங்குவதற்கான பணத்தை சேமிக்க தான் பணிபுரியும் பர்னிச்சர் கடையில் உள்ள கழிவறையில் வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார்.
- தண்ணீர் மற்றும் மின்சார செலவுகளுக்கு போதுமான தொகையை மட்டுமே அவர் வசூலித்து வருகிறார்.
சொந்த வீடு வாங்குவது பலரின் கனவாக இருக்கும். ஆனால் அந்த கனவுக்காக ஒருவர் எந்த எல்லையையும் கடக்கலாம் என்பதற்கு உதாரணமாக சீன பெண் ஒருவர் திகழ்ந்து வருகிறார்.
சீனாவில் யாங் என்ற 18 வயது பெண் சொந்த வீடு வாங்குவதற்கான பணத்தை சேமிக்க தான் பணிபுரியும் பர்னிச்சர் கடையில் உள்ள கழிவறையில் வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார். அதிகரித்து வரும் வாடகை செலவுகளையும் கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
மாதம் ரூ.34,570 சம்பாதிக்கும் யாங் வாடகையாக ரூ.545 மட்டுமே செலுத்துகிறார். குளிப்பது, சமைப்பது, துணிகளை துவைப்பது, உறங்குவது என அனைத்து வேலைகளையும் அந்த சிறிய இடத்திலேயே அவர் செய்து கொள்கிறார்.
பணிநேரங்களில் மற்றவர்கள் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தனது உடைமைகளை வேறு இடத்திற்கு மாற்றி விடுகிறார்.

ஆரம்பத்தில், யாங் மாதத்திற்கு ரூ. 2,290 வாடகை செலுத்த முன்வந்தார். ஆனால் அவரது முதலாளி அதற்கு மறுத்துவிட்டார். தண்ணீர் மற்றும் மின்சார செலவுகளுக்கு போதுமான தொகையை மட்டுமே அவர் வசூலித்து வருகிறார்.
கடையில் தங்குவதற்கு அலுவலக இடம் வழங்கப்பட்டாலும், கதவு இல்லாததால் யாங் சங்கடமாக உணர்ந்தார். எனவே தற்போது ஓய்வறையில் வசிக்கும் யாங், கதவில் துணியை தொங்கவிட்டு, தனது வீடாக அதை பாவிக்கிறார்.
மேலும் இரவில் மடிப்பு படுக்கையை உபயோகிக்கிறார். தனது ரூ.34,570 மாத சம்பளத்தில் யாங் தனது செலவுகளை வெறும் ரூ. 4,500 ஆகக் குறைத்து கடும் சிக்கனத்துடன் வாழ்ந்து வருகிறார்.