என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jail"

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே 17 வயது சிறுமி ஒருவரை காதலிக்குமாறு வற்புறுத்தி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படு கிறது.
    • அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, 17 வயது சிறுமியை காதலிக்க வற்புறுத்தி தொந்தரவு செய்த சிவக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள சரளைமேடு, காமராஜர் நகரை சேர்ந்தவர் அர்ஜூனன். இவரது மகன் சிவக்குமார் (வயது 23) கூலித்தொழிலாளி.

    இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை காதலிக்குமாறு வற்புறுத்தி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படு கிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, 17 வயது சிறுமியை காதலிக்க வற்புறுத்தி தொந்தரவு செய்த சிவக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை நாமக்கலில் உள்ள மகிளா நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, பரமத்தியில் உள்ள கிளைச் சிறையில் அடைத்தனர்.

    • பாலியல் தொல்லை செய்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது
    • இந்த வழக்கு விசாரணை கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது

    கரூர்:

    கரூர் மாவட்டம், சோமூர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 61) இவர், அதே பகுதியை சேர்ந்த 27 வயதுடைய மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு கடந்த, 2020-ம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண்ணின், தாய் கொடுத்த புகாரின்பேரில், கரூர் மகளிர் போலீசார், அர்ஜூனனை கைது செய்தனர், இந்த வழக்கு விசாரணை கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.விசாரணை முடிந்து வழங்கப்பட்ட தீர்ப்பில் அர்ஜூனனுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி நசீமா பானு உத்தரவிட்டார்.


    • எலக்ட்ரிசன் இளைஞருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டு சிறைதண்டனை
    • கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு

    கரூர்

    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை அடுத்த பழைய ஜெயங்கொண்டத்தில் மருதாயி என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவரது பேரன் பழைய ஜெயங்கொண்டம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவனின் பெற்றோர் தொழிலுக்காக கரூர் காந்திகிராமத்தில் வசித்து வருகின்றனர். சிறுவன் கடந்த 27.03.2022 அன்று மாலை 6.30 மணிக்கு வீட்டருகில் உள்ள கடைக்கு சென்று பேனா, பென்சில் வாங்கி விட்டு திரும்பி வந்த போது அவரது வீட்டருகில் வசித்து வரும் ஆனந்த் (எ) அறிவானந்தன் (வயது 28) சிறுவனை அழைத்து நான் பேனா, பென்சில் வச்சுருக்கேன், நான் தரேன் வா என்று ஆசை வார்த்தை கூறி அழைத்து கொண்டு அருகில் உள்ள பள்ளிக்கு கூட்டிச்சென்று, பள்ளியின் கேட் மூடியிருந்ததால் சிறுவனை பள்ளியின் காம்பவுண்ட் மேல் ஏறி உட்கார வைத்து பின் பள்ளியின் காம்பவுண்ட் சுவர் ஏறி இறங்கி சிறுவனை இறக்கிவிட்டு பள்ளியின் வராண்டாவில் வைத்து 2ம் வகுப்பு மட்டுமே படிக்கும் சிறுவன் என்றும் பாராமல் எதிரி ஆனந்த் (எ) சிறுவனை நுழைத்தலான பாலியல் தாக்குதல் புரிந்துள்ளார். இது பற்றி வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக சிறுவனை மிரட்டியுள்ளார். இது தொடர்பாக சிறுவன் தனது பாட்டியிடம் கூறி, பின் போன் மூலம் சிறுவனின் தாயாரிடம் சம்பவம் பற்றி கூறியுள்ளனர்.

    சிறுவனின் தாயார் தனது மகனை விசாரித்து பின் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் எலக்ட்ரிசன் ஆனந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்பு அவன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகின்றான்.

    இது தொடர்பான வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனை விசாரித்த நீதிபதி நசீமா பானு, சிறுவனை கடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், குழந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3 ஆயிரம் அபராதம் விதித்தும், தண்டணையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இழப்பீடாக 1,50,000 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

    • ஆத்திரம் அடைந்த மைதீன் அப்துல்காதர் ஜெய்லானியை கத்தியால் குத்தினார்.
    • கொலை வழக்கு பதிவு செய்து மைதீனை பேட்டை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை பேட்டை பகுதியை சேர்ந்தவர் அப்துல்காதர் ஜெய்லானி (வயது 33). இவர் கடந்த 14-6-2015-ம் ஆண்டு தனது மனைவி மற்றும் நண்பரான யாசர்அராபத் ஆகியோருடன் வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது டி.வி.யை அதிக அளவு சத்தம் வைத்து பார்த்தாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக பக்கத்து வீட்டை சேர்ந்த மைதீன் என்ற முகமது மைதீன் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த மைதீன் கத்தியால் அப்துல்காதர் ஜெய்லானியை சராமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 17-6-2015-ம் ஆண்டு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக பேட்டை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மைதீனை கைது செய்தனர். இதுகுறித்த விசாரணை நெல்லை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று அந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.

    கொலை வழக்கில் கைதான மைதீனுக்கு 15 ஆண்டுகள் 1 மாதம் சிறைதண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி ஜெசிந்தாமார்ட்டின் உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கருணாநிதி ஆஜரானார்.

    • கடந்த நான்கு மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.
    • பாலுக்கு அழுத தனது 4 மாத குழந்தையை, கழுத்தை நெறித்து கொலை செய்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் அக்க ரைவட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் தீனதயாளன். இவருக்கும், நல்லாத்தூர் மேலப்படுகை கிராமத்தை சேர்ந்த துர்காலட்சுமிக்கும் (வயது 35) 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் பிரசவ த்துக்காக துர்காலட்சுமி தாய் வீட்டிற்கு சென்றார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. அங்கு துர்காலட்சுமியில் தாய் தமிழரசி (65), தந்தை பரமசிவம் (75), சகோதரர்கள் ஆண்டவர் (40), நடராஜன் (38), பாட்டி வேதவல்லி (85) ஆகியோர் உள்ளனர்.   இந்நிலையில் கடந்த 26ந் தேதி அதிகாலை, பாலுக்கு அழுத தனது 4 மாத குழந்தையை, கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, தூங்கி கொண்டிருந்த குடும்ப உறுப்பினர்கள் தாய், தந்தை, பாட்டி மற்றும் சகோதர்கள் 2 பேர் என 5 பேரை, மண்வெட்டியால் வெட்டிவிட்டு வீட்டின் உள்ளே சென்று சமையல றையில் இருந்த கத்தியை எடுத்து, தன்னைத்தானே கழுத்தில் அறுத்துகொண்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். இரத்தவெள்ளத்தில் நடராஜன் பக்கத்து வீட்டு கதவை தட்டி சப்தம் போட்டு நடந்த சம்பவத்தை கூறி உதவிகேட்டுள்ளார்.

    உடனடியாக அருகில் இருந்தவர்கள் அனைவரை யும் மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மற்ற 6 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் வேதவல்லி சிகிச்சை பலனின்றி இறந்து போனார்         இது குறித்து நெடுங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆஸ்பத்திரிக்கு சென்ற போலீசார் துர்க்கா லட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில்தாய்பால் அதிகம் சுரக்காத காரணத்தால், பால் கொடுக்க முடியாமல் தவியாய் தவித்து வந்தேன். குழந்தை சதா அழுந்துகொண்டே இருந்தது. வீட்டில் உள்ளவர்கள் யாரும் இதற்கு உதவவில்லை. இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டு குழந்தை, மற்றவர்களை கொலை செய்ய முயன்றேன். என வாக்குமூலம் கொடுத்துள்ளார். தொ டர்ந்து, துர்க்காலட்சுமியை கைது செய்த போலீசார் காரைக்கால் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுச்சேரி சிறையில் அடைத்தனர்.

    • சிறுமி பாலியல் வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
    • ரூ.2 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்

    புதுக்கோட்டை

    அறந்தாங்கி இந்திரா நகரை சேர்ந்தவர் சரவணன்(வயது 48), தொழிலாளியான இவர், 5 வயது சிறுமியை கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பளித்தார்.அதில் குற்றஞ்சாட்டப்பட்ட சரவணனுக்கு ஆயுள் சிறை தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிடடார். மேலும் இந்த அபராத் தொகை மற்றும் அரசு சார்பில் 2.5 லட்சத்தை சிறுமிக்கு நிவாரணமாக வழங்க வேண்டும் எனவும் உத்தவில் குறுப்பிட்டுள்ளார்.

    • விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
    • திருப்பூா் வடக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

    திருப்பூர் :

    தருமபுரியை சோ்ந்தவா் முருகன் (வயது 38). இவா் திருப்பூா் முருகானந்தபுரத்தில் சொந்தமாக கோழிக் கடை வைத்திருந்தாா். கடந்த 2020 பிப்ரவரி 19ந்தேதி அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் திருப்பூா் வடக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

    புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினா், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து முருகனை கைது செய்தனா். இந்த வழக்கு திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி பாலு தீா்ப்பு வழங்கினாா்.

    இதில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த முருகனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜமீலா பானு ஆஜரானாா்.

    • பெரம்பலூரில் கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது
    • இதில் படுகாயமடைந்த கந்தன் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்

    பெரம்பலூர்:

    விவசாயியை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, நமையூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிமுத்து மகன் கந்தன். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த கண்ணுசாமி மகன் கலியமூர்த்தி (வயது39) என்பவருக்கும் இடப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இதில் கடந்த 2020ம் ஆண்டு நடந்த தகராறில் கலியமூர்த்தி (39), அவரது தம்பிகள் கருணாநிதி (35), சரத்குமார் (32) ஆகியோர் கந்தனை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதில் படுகாயமடைந்த கந்தன் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகள் கலியமூர்த்தி உட்பட 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மூர்த்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட கலியமூர்த்திக்கு 6 மாதம் சிறை தண்டனையும், கருணாநிதி மற்றும் சரத்குமார் ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், மூன்று பேருக்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.


    • கொலை முயற்சி வழக்கில் சகோதரர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
    • இடப்பிரச்சினை தொடர்பாக இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, நமையூரை சேர்ந்த கந்தன் என்பவருக்கும், காலனி தெருவை சேர்ந்த கலியமூர்த்தி (வயது 39) என்பவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் அவர்கள் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக மங்களமேடு போலீசார் கலியமூர்த்தி தரப்பினர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த பெரம்பலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

    இதில், இந்த வழக்கின் குற்றவாளிகளான கலியமூர்த்திக்கு 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும், அவரது தம்பி கருணாநிதிக்கும் (35), மற்றொரு தம்பியான சரத்குமாருக்கும் (32) தலா ஒரு ஆண்டு சிறை தண்டனையுடன், ரூ.ஆயிரம் அபராதமும் மற்றும் 2 நபர்களை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பளித்தார். மேற்படி கொலை முயற்சி வழக்கில் சிறப்பாக செயல்பட்டு புலன் விசாரணையை முடித்து குற்றவாளிகளின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த மங்களமேடு போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷியாம்ளா தேவி வெகுவாக பாராட்டினார்.

    • குழந்தை திருமணம் செய்த வாலிபருக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கபட்டுள்ளது
    • பெரம்பலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த வர் தனது மகளை காணவில்லை எனவும், அரணாரை கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் லட்சுமணன் என்பவர் மீது சந்தேகமாகவுள்ளதாகவும் , தனது மகளை கண்டுபிடித்து தருமாறு பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசனில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.இதில் அரணாரை வடக்குகாலனியை சேர்ந்த மாரிமுத்து மகன் லட்சுமணன் (வயது31) என்பவர் சிறு வயது பெண் குழந்தை திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் லட்சுமணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்து. அரசு தரப்பில் வக்கீல் சுந்தரராஜன் ஆஜரானார். நேற்று விசாரணை செய்த நீதிபதி முத்துகுமரவேல் குற்றவாளி லட்சுமணனுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

    • அரியலூர் அருகே போக்சோ வழக்கில் வாலிபருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது
    • ரூ.1லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த மேலநெடுவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்குமார் மகன் விஜயகுமார்(வயது25). இவர், அதே கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு வந்த 18 வயது சிறுமியை காதலித்துள்ளார். இதையடுத்து 2020ம் ஆண்டு சிறுமியை காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு விஜயகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில் இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் பெண்ணை கடத்தியது மற்றும் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக விஜயகுமாருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.7 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து விஜயகுமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ராஜா ஆஜரானார்.

    • அரியலூர் அருகே பாலியல் வழக்கில் கைதான வாலிபருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
    • பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு அரசு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அடுத்த கோக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹென்றிசேவியர் மகன் ஹெலிலன்ராஜ்(வயது23). இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு 9 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஹெலிலன்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றவாளி ஹெலிலன்ராஜ்க்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி அனந்தன் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு அரசு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து ஹெலிலன்ராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ம.ராஜா ஆஜராகினார்.


    ×