search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூரில் 2ம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு பாலியல் தொல்லை
    X

    கரூரில் 2ம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு பாலியல் தொல்லை

    • எலக்ட்ரிசன் இளைஞருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டு சிறைதண்டனை
    • கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு

    கரூர்

    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை அடுத்த பழைய ஜெயங்கொண்டத்தில் மருதாயி என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவரது பேரன் பழைய ஜெயங்கொண்டம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவனின் பெற்றோர் தொழிலுக்காக கரூர் காந்திகிராமத்தில் வசித்து வருகின்றனர். சிறுவன் கடந்த 27.03.2022 அன்று மாலை 6.30 மணிக்கு வீட்டருகில் உள்ள கடைக்கு சென்று பேனா, பென்சில் வாங்கி விட்டு திரும்பி வந்த போது அவரது வீட்டருகில் வசித்து வரும் ஆனந்த் (எ) அறிவானந்தன் (வயது 28) சிறுவனை அழைத்து நான் பேனா, பென்சில் வச்சுருக்கேன், நான் தரேன் வா என்று ஆசை வார்த்தை கூறி அழைத்து கொண்டு அருகில் உள்ள பள்ளிக்கு கூட்டிச்சென்று, பள்ளியின் கேட் மூடியிருந்ததால் சிறுவனை பள்ளியின் காம்பவுண்ட் மேல் ஏறி உட்கார வைத்து பின் பள்ளியின் காம்பவுண்ட் சுவர் ஏறி இறங்கி சிறுவனை இறக்கிவிட்டு பள்ளியின் வராண்டாவில் வைத்து 2ம் வகுப்பு மட்டுமே படிக்கும் சிறுவன் என்றும் பாராமல் எதிரி ஆனந்த் (எ) சிறுவனை நுழைத்தலான பாலியல் தாக்குதல் புரிந்துள்ளார். இது பற்றி வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக சிறுவனை மிரட்டியுள்ளார். இது தொடர்பாக சிறுவன் தனது பாட்டியிடம் கூறி, பின் போன் மூலம் சிறுவனின் தாயாரிடம் சம்பவம் பற்றி கூறியுள்ளனர்.

    சிறுவனின் தாயார் தனது மகனை விசாரித்து பின் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் எலக்ட்ரிசன் ஆனந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்பு அவன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகின்றான்.

    இது தொடர்பான வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனை விசாரித்த நீதிபதி நசீமா பானு, சிறுவனை கடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், குழந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3 ஆயிரம் அபராதம் விதித்தும், தண்டணையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இழப்பீடாக 1,50,000 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

    Next Story
    ×