search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இசையும், மொழியும் பரஸ்பரம் செய்துகொள்ளும் போதுதான் கலை வெற்றி பெறுகிறது எனவும் வைரமுத்து கூறினார்.
    • வைரமுத்துவை வாழவைத்த இளையராஜாவின் போட்டோ வைத்து தினம் வணங்க வேண்டும்.

    சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, ஒரு பாடலில் இசை பெரியதா, மொழி பெரியதா என்பது ஒரு பெரிய சிக்கலாகப் பேசப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், அதுகுறித்து விவரித்த வைரமுத்து, இதில் என்ன சந்தேகம்., இசை எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியது மொழி. மொழி எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியது இசை. இரண்டும் கூடினால்தான் பாட்டு என்று பொருள் என எடுத்துரைத்தார். சில நேரங்களில், இசையை விட மொழி சிறந்ததாகவும். சில நேரங்களில், இசை சிறந்ததாகவும் திகழ்கிற சந்தர்ப்பங்களும் உண்டு என்று கூறிய வைரமுத்து, இதைப் புரிந்து கொண்டவன் ஞானி. இதைப் புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி என்றார். மேலும், பாட்டுக்குப் பெயர் வைத்தது மொழிதான். அதற்கு அழகு செய்தது இசை, அபிநயம் செய்தது இசைதான். இசையும், மொழியும் பரஸ்பரம் செய்துகொள்ளும் போதுதான் கலை வெற்றி பெறுகிறது எனவும் வைரமுத்து கூறினார்.

    இதற்கு பதிலளித்துள்ள இளையராஜாவின் சகோதரரும், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளருமான கங்கை அமரன்:

    எங்களால் மேலே வந்தவர், வந்த இடத்தையே காலில் போட்டு மிதிப்பது போன்று பேட்டி கொடுத்துள்ளார் வைரமுத்து என தெரிவித்துள்ளார். மனிதனுக்கு நன்றி வேண்டும். அவரது பாடலுக்கு அதிகமான புகழ் வந்ததால் வைரமுத்துவுக்கு கர்வம் தலைக்கேறிவிட்டது. அடக்கி வைக்க ஆள் இல்லாததால் துள்ளிக் கொண்டிருக்கிறார் வைரமுத்து. இளையராஜாவும், வைரமுத்துவும் நண்பர்களாக இருந்தவர்கள்., அப்படியே இருந்த நட்பை கொச்சைப்படுத்துகிறார் வைரமுத்து. வைரமுத்துவை வாழவைத்த இளையராஜாவின் போட்டோ வைத்து தினம் வணங்க வேண்டும். அவர் இல்லை என்றால் வைரமுத்துவின் பெயரே இருந்திருக்காது. நான் அவருக்குச் சவால் விடுகிறேன், இளையராஜா இசையில் நீங்கள் எழுதிய பாடல்களை வேறு ஒரு இசையமைப்பாளரிடம் கொடுத்துப் பாருங்கள், அது முடியாது. இசையில்லாமல் பாடல்கள் இல்லை. தன்னைத் தானே புகழ்ந்து பேசிக்கொண்டு இருக்கக்கூடிய கவிஞர்கள் யார் இருக்கிறார்கள்? இளையராஜா குறித்து குற்றமோ, குறைகளோ சொல்வதாக இருந்தால் அதற்குரிய விளைவுகளை வைரமுத்து சந்தித்தே ஆக வேண்டும். வைரமுத்து இனிமேல் வாயை மூடிக் கொண்டு வேலையை பார்த்தால் அவருக்கு நல்லது எனவும் எச்சரித்துள்ளார் கங்கை அமரன்.

    • மொழி சிறந்ததாகவும் திகழ்கிற சந்தர்ப்பங்கள் உண்டு.
    • பாட்டுக்குப் பெயர் வைத்தது மொழிதான்.

    முத்துக்குமார் தயாரிப்பில் செல்வம் மாதப்பன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய படம் 'படிக்காத பக்கங்கள்.' யாஷிகா ஆனந்த் முதன்மை தோற்றத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ஜார்ஜ் மரியான் மற்றும் லொள்ளு சபா மனோகர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய வைரமுத்து, "இந்தப் 'படிக்காத பக்கங்கள்' இசை வெளியீட்டு விழா மிகவும் முக்கியமான நிகழ்வு. ஒரு பாடலில், இசை பெரிதா, மொழி பெரிதா என்பது ஒரு பெரிய சிக்கலாகப் பேசப்பட்டு வருகிறது. இதில் என்ன சந்தேகம்? இசை எவ்வளவு பெரிதோ, அவ்வளவு பெரிது மொழி. மொழி எவ்வளவு பெரிதோ, அவ்வளவு பெரிது இசை. இரண்டும் கூடினால்தான் அதற்குப் பாட்டு என்று பொருள்."

    "சில நேரங்களில், இசையை விட மொழி சிறந்ததாகவும், சில நேரங்களில், மொழி சிறந்ததாகவும் திகழ்கிற சந்தர்ப்பங்கள் உண்டு. இதைப் புரிந்து கொண்டவன் ஞானி. இதைப் புரிந்து கொள்ளாதவன் அந்ஞானி."

    "பாட்டுக்குப் பெயர் வைப்பது இசையா, மொழியா? பாட்டுக்குப் பெயர் வைத்தது மொழிதான். அதற்கு அழகு செய்தது இசை, அபிநயம் செய்தது இசை, அதை மறுக்க முடியாது. இசையும் மொழியும் பரஸ்பரம் செய்து கொள்ளும் போதுதான் கலை வெற்றி பெறுகிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்," என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
    • இந்த படத்தை இயக்குநர் தன்ராஜ் இயக்கியுள்ளார்.

    அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், சமுத்திரக்கனி நடித்திருக்கும் புதிய படம் ராமம் ராகவம். தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் உருவாகி இருக்கும் ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

    இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பாலா பேசும் போது, "சமுத்திரக்கனியின் மாபெரும் ரசிகனாக வந்திருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நடிகனாக அவர் நிரூபித்து விட்டார். அவருடைய உழைப்பிற்கு நான் ரசிகன். கடுமையாக உழைக்கக்கூடியவர்."

    "மற்றவர்களுக்கு உதவக்கூடிய அவருடைய தன்மை எனக்கு வியப்பாக இருக்கும். உதவுவதில் அவருக்கு பெரிய மனசு இருக்கு. இந்த படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்," என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • ராயன் படத்தை தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் தனுஷ்.
    • இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ரஷ்மிகா, நாகர்ஜுனா என பலர் நடித்து வருகின்றனர்.

    நடிகர் தனுஷின் 50-வது படமான ராயன் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் ரகுமானின் இசையில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் ராயன் படத்தை தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் தனுஷ். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ரஷ்மிகா, நாகர்ஜுனா என பலர் நடித்து வருகின்றனர்.தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

    குபேரா படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்று வந்த நிலையில், மும்பையில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக சென்ற வாரம் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்தாண்டு இறுதிக்குள் குபேரா திரையில் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

    இந்நிலையில் படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தின் சுவாரசியமான அப்டேட் வரும் மே 2 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் பண கட்டுகள் அடுக்கி வைத்துள்ள புகைப்படத்தில் குபேரா என்ற படத்தின் தலைப்பை வைத்து இருக்கின்றனர். படத்தின் டீசர் அல்லது கில்ம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது படம் எம்மாதிரி கதைக்களத்துடன் இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சூர்யாவுக்கு பதிலாக அருண்விஜய் படத்தில் இணைந்து நடிக்க தொடங்கினார்.
    • அருண் விஜயுடன் மமிதா பைஜூ, ரோஷினி பிரகாஷ், சமுத்திரகனி, மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம் வணங்கான். படத்தில் முதலில் சூர்யா கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி பின்னர் சில காரணங்களால் படத்தில் இருந்து அவர் விலகினார். பாலா இதற்கு முன் துருவ் விக்ரமை வைத்து இயக்கிய வர்மா திரைப்படமும் பாதியிலே கைவிடப்பட்டது.

    இதைத் தொடர்ந்து சூர்யாவுக்கு பதிலாக அருண்விஜய் படத்தில் இணைந்து நடிக்க தொடங்கினார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ஜி.வி. பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார். தீவிரமாக நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகளில் இருக்கிறது என போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    அருண் விஜயுடன் மமிதா பைஜூ, ரோஷினி பிரகாஷ், சமுத்திரகனி, மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'குரங்கு பெடல்' படத்தை அடுத்து எஸ் கே ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. கமலக்கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்
    • இப்படம் வரும் மே மாதம் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டிரெயிலர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

    சிவகார்த்திகேயன் தற்பொழுது அமரன் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். நடிப்பது மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் பல வெற்றி படங்களை தயாரித்தும் வருகிறார்.

    சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன. தற்போது சூரி நடிக்கும் கொட்டுக்காளி என்ற படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார். இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டை பெற்றுள்ளது. விரைவில் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதைதொடர்ந்து 'குரங்கு பெடல்' படத்தை அடுத்து எஸ் கே ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. கமலக்கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார் இதற்கு முன் இவர் 'வட்டம்' மற்றும் 'மதுபான கடை' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

    காளி வெங்கட் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ராசி அழகப்பன் எழுதிய சிறுக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வரும் மே மாதம் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டிரெயிலர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

    கோடை விடுமுறையில் நாம் சிறுவயதில் செய்த குறும்பையும் விளையாட்டையும் கண் முன் காட்சி படுத்தியுள்ளனர். 5 நண்பர்கள் அவர்களது கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக செலவிடும் காட்சிகளும் அதில் யார் முதலில் சைக்கிள் ஓட்ட கத்துக் கொள்கிறார்கள போன்ற காட்சிகள் டிரைலரில் இடம் பெற்றுள்ளது.

    சைக்கிள் ஓட்டுவதற்காக் ஒரு சிறுவன் எவ்வளவு முயற்சிகளை செய்கிறான் அதற்கடுத்து என்ன நடந்தது என டிரைலர் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • இதில், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜித் ஷங்கர், ஜிஎம் சுந்தர், எஸ்.ரம்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

    'மெளனகுரு', 'மகாமுனி' படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் கவனம் பெற்றவர் இயக்குனர் சாந்தகுமார். இவர் இயக்கியுள்ள மூன்றாவது படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் இணைந்து 'போர்' என்ற படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை 'டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி' தயாரிக்கிறது. இப்படத்திற்கு 'ரசவாதி' என்று தலைப்பிடப்பட்டது.

    இதில், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜித் ஷங்கர், ஜிஎம் சுந்தர், எஸ்.ரம்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு சிவா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

    ஜனவரி மாதம் இப்படத்தின் டீசர் வெளியாகி மக்கள் கவனத்தை பெற்றது. அதைத்தொடர்ந்து தற்பொழுது படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது . படத்தின் டிரெயிலரை திரைத்துறை பிரபலமான லோகேஷ் கனகராஜ், அனிருத், கார்த்தி, கார்த்திக் சுப்பராஜ், துல்கர் சல்மான், எஸ்.ஆர் பிரபு அவர்களின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டனர். படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    அர்ஜூன் தாஸ் கதாப்பாத்திரத்தின் மூன்று காலக்கட்டத்துடைய வாழ்க்கை இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. ரசவாதி படத்தின் டிரெயிலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.மௌனகுரு மற்றும் மகாமுனி வெற்றியைத் தொடர்ந்து இப்படமும் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் நெப்போலியன் 1990-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தார்.
    • நடிகர் நெப்போலியன் நடிகராக மட்டுமின்றி அமெரிக்காவில் ஜீவன் டெக்னாலஜிஸ் என்ற சாப்ட்வேர் நிறுவனமும் நடத்தி வருகிறார்.

    நடிகர் நெப்போலியன் 1990-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தார். தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களில் சுல்தான், அன்பறிவு மற்றும் வல்லவனுக்கும் வல்லவன் திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

    நடிகர் நெப்போலியன் நடிகராக மட்டுமின்றி அமெரிக்காவில் ஜீவன் டெக்னாலஜிஸ் என்ற சாப்ட்வேர் நிறுவனமும் நடத்தி வருகிறார். தற்போது தனது குடும்பத்துடன் மகனின் சிகிச்சைகாக அங்கே தங்கியிருக்கும் நெப்போலியன் அங்கு விவசாயமும் செய்து வருகிறார்.

    ஒரு படத்திற்கு கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர் சங்கத்துக்கு நிதிப் பற்றாக்குறை என்பது சற்று யோசிக்கத்தான் வைக்கிறது.  ஏற்கனவே 40 கோடி செலவில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டிருந்தது. மேலும் 25 கோடிகள் தேவைப்பட்ட நிலையில் தற்போது நடிகர்கள் பலர் வாரிக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

    நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர்கள் கமல், விஜய், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நிதியுதவி வழங்கினர். மேலும், பல்வேறு நடிகர்களும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் நெப்போலியன், நடிகர் சங்க கட்டிட பணிக்காக ரூ.1 கோடியை வைப்பு நிதியாக வழங்கியுள்ளார். இது தொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;

    "தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் 2000 - 2006ம் காலகட்டத்தில் சங்கத்தின் உபதலைவராக பொறுப்பேற்று செயலாற்றியவருமான நெப்போலியன் சங்க கட்டிட வளர்ச்சிக்காக ரூ.1 கோடி வைப்புநிதியாய் வழங்கினார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த வாழ்த்து கூறி நன்றியை தெரிவித்துக்கொள்கிறது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இம்முறை நடிகர் சங்க கட்டிடம் எந்தவித தடங்களும் இல்லாமல் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படம் நிவின் பாலிக்கு மிகப் பெரிய கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • படம் வரும் மே1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் பாடலான தி வொர்ல்ட் ஆஃப் கோபி லிரிக் வீடியோ நேற்று வெளியாகியது. அதைத்தொடர்ந்து படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

    மலையாள சினிமாவின் முன்னணி பிரபலங்களுள் நிவின் பாலியும் ஒருவர். சமீபத்தில் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் வெளியான வருஷங்களுக்கு சேஷம் படத்தில் நிவின் பாலி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். இவரின் கதாப்பாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து நிவின் பாலி தற்பொழுது மலையாளி ஃப்ரம் இந்தியா என்ற படத்தில் நடித்துள்ளார்.

    இப்படம் நிவின் பாலிக்கு மிகப் பெரிய கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இப்படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியுள்ளார். இதற்கு முன் பிரித்விராஜ் நடிப்பில் வெளிவந்து மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்ற 'ஜன கன மன' திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    நிவின் பாலியுடன் அனஸ்வர ராஜன், தியான் ஸ்ரீனிவாசன், மஞ்சு பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை நிவின் பாலி ஜூனியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. படம் வரும் மே1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் பாடலான தி வொர்ல்ட் ஆஃப் கோபி லிரிக் வீடியோ நேற்று வெளியாகியது. அதைத்தொடர்ந்து படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

    படத்தின் டீசரை குறித்து படத்தின் இயக்குனரான டிஜோ ஜோஸ் ஆண்டனி அவரது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'இப்படம் அனைத்து மலையாளிகளுக்கும் பிடிக்கும், ஒரு மலையாளியின் அன்றாட வாழ்வியலை சித்தரிக்கும் விதமாகதான் இப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. ஆல்பரம்பில் கோபி, அவனுடைய வாழ்க்கை, அவன் வாழ்க்கையை மாற்றக் கூடிய சம்பவங்களை பற்றி பேசும் படமாக இது இருக்கும். உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்படும் இத்திரைப்படம் வேலை இல்லாமல் திண்டாடும் இரண்டு கதாப்பாத்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும், அனைத்து மொழி மக்களும் படத்தை காண வர வேண்டும்." என கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விஜய் சேதுபதி நடித்து வெற்றிகரமாக ஓடிய படங்களும் தற்போது 'ரீ ரிலீஸ்' செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன
    • நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" 2 படங்களும் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட உள்ளன.

    தமிழ் சினிமாவில் தற்போது "ரீ-ரிலீஸ்" படங்கள் தியேட்டர்களில் நன்றாக ஓடி கொண்டிருக்கிறது. 'வாரணம் ஆயிரம்', 'வேட்டையாடு விளையாடு', '3', 'விண்ணைத் தாண்டி வருவாயா' உள்ளிட்ட படங்கள் வெற்றிகரமாக ஓடி வருகின்றன.





    இந்நிலையில் சமீபத்தில் தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் உருவான 'கில்லி' படம் "ரீ ரிலீஸ்" செய்யப்பட்டு மிகப்பெரும் வசூல் சாதனை செய்தது. இதையடுத்து, மே 1 - ந்தேதி அஜித்தின் பிறந்தநாளை யொட்டி "பில்லா" ,மற்றும் "தீனா" ஆகிய படங்கள் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட் உள்ளன.



    இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்து வெற்றிகரமாக ஓடிய படங்களும் தற்போது 'ரீ ரிலீஸ்' செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கடந்த 2012 -ம் ஆண்டு விஜய் சேதுபதி நடித்த 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" ஆகிய 2 படங்களும் விரைவில் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட உள்ளன.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்தின் இரண்டு நாயகிகளாக சித்தி இத்னானி மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர்.
    • சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே படத்தை இயக்கிய கிருஷ் திருக்குமரன் அருண் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குகிறார்.

    2014 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே படத்தை இயக்கிய கிருஷ் திருக்குமரன் அருண் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குகிறார்.

    படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது.

    இந்த படத்திற்கு 'ரெட்ட தல' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் இரண்டு நாயகிகளாக சித்தி இத்னானி மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது நடிகர் அருண் விஜய்-க்கு 36 வது படமாகும்.

    மான் கராத்தே திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு எப்படி ஒரு மாறுபட்ட படமாக அமைந்ததோ ரெட்ட தல திரைப்படம் அருண் விஜய்-க்கு முக்கிய திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வாரம் வெளிவந்த நிலையில் தற்பொழுது படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமீபத்தில் ஜிவி பிரகாஷுடன் இணைந்து டியர் படத்தில் நடித்தார்.
    • ’உத்தரகண்டா’ என்ற கன்னட படத்தில் துர்கி என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

     தமிழ் திரையுலகில் கடந்த 2019 முதல் சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், கடந்த 2012ம் ஆண்டு வெளியான "அட்டக்கத்தி" என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். 2010ம் ஆண்டு வெளியான "நீதானா அவன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் அவர் திரையுலகில் களமிறங்கினார்.

    தொடர்ச்சியாக தமிழில் "ரம்மி", "பண்ணையாரும் பத்மினியும்", "திருடன் போலீஸ்", "காக்கா முட்டை", "மனிதன்", மற்றும் "தர்மதுரை" போன்ற படங்களில் இயல்பான தனது நடிப்பை வெளிப்படுத்தி புகழ்பெற்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

    சமீபத்தில் ஜிவி பிரகாஷுடன் இணைந்து டியர் படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து அடுத்தடத்த படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். 'உத்தரகண்டா' என்ற கன்னட படத்தில் துர்கி என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அவர் நடிக்கும் முதல் கன்னட படம் இதுவே.

     

    இந்நிலையில் அவர் கருப்பு நிற ஜல்லடை ஆடையில் கிளாமர் போட்டோஷூட் செய்து அதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் " வியரிங் பிளாக் இஸ் எ வே ஆஃப் லைஃப்" என்ற தலைப்பில் பதிவிட்டுல்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×