search icon
என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • நாட்டு வெடிகுண்டுகள், பெட்ரோல் வெடிகுண்டுகள், பயங்கர ஆயுதங்கள் சிக்கியது.
    • பல்வேறு தொகுதிகளில் தொடர்ந்து வன்முறை ஏற்பட்டு வருகிறது.

    திருப்பதி:

    ஆந்திராவில் கடந்த 13-ந் தேதி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.

    தேர்தல் நாள் அன்று ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும், தெலுங்கு தேச கூட்டணியில் உள்ள ஜனசேனா, பா.ஜ.க கட்சியினருக்கும் இடையே பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது.

    தேர்தல் முடிந்த பின்னரும் பல்நாடு, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் தொடர்ந்து வன்முறை ஏற்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் வீடுகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாட்டு வெடிகுண்டுகள், பெட்ரோல் வெடிகுண்டுகள், பயங்கர ஆயுதங்கள் சிக்கியது.

    அவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். இதில் போலீசாரின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    வன்முறையை தடுக்க தேர்தல் ஆணையம் துணை ராணுவ படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என உள்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்தியது.

    இதையடுத்து உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் 25 கம்பெனி துணை ராணுவ படையினர் வன்முறை ஏற்படும் இடங்களில் துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் அப்பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் அவர்களுக்கு தங்கும் அறைகள் கிடைக்காமல் கோவில் வளாகம், பூங்காக்கள், மரத்தடி உள்ளிட்ட இடங்களில் படுத்து உறங்குகின்றனர்.
    • திறந்த வெளியில் தங்குவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    கோடை விடுமுறை மற்றும் ஆந்திரா, தெலுங்கானாவில் தேர்தல்கள் முடிந்ததால் 2 மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.

    இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள அறைகள் மற்றும் நாராயணகிரி பூங்காவில் உள்ள அறைகளில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சீலா தோரணம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் அவர்களுக்கு தங்கும் அறைகள் கிடைக்காமல் கோவில் வளாகம், பூங்காக்கள், மரத்தடி உள்ளிட்ட இடங்களில் படுத்து உறங்குகின்றனர்.

    திறந்த வெளியில் தங்குவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 76 369 பேர் தரிசனம் செய்தனர். 41,927 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.63 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    24 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • முன்னெச்சரிக்கையாக அனைவரும் காரில் இருந்து கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
    • தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து கீழ் திருப்பதிக்கு கார் ஒன்று வந்தது. அப்போது காரில் திடீரென புகை வரவே, டிரைவர் காரை ஓரங்கட்டியதால் அனைவரும் கீழே இறங்கினர். கண்ணிமைக்கும் நேரத்தில் கார் முழுவதும் தீ பிடித்து எரிந்தது. முன்னெச்சரிக்கையாக அனைவரும் காரில் இருந்து கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆந்திராவில் அதிகபட்சமாக வாக்குகள் பதிவாகியுள்ளது.
    • கட்சியின் வெற்றிக்காக பாடுபட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்களை பாராட்டுகிறேன்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் வாக்கு பதிவு நடந்தது. இதில் அதிகபட்சமாக 81.86 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்காளர்க ளுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி எக்ஸ் தளத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    அதில் அனைத்து முதியோர்கள், சகோதரிகள், சகோதரர்கள், விவசாயிகள், சிறுபான்மையின சகோதரர்கள், குறிப்பாக கோடை வெயிலைத் தாங்கிக்கொண்டு பெருமளவில் வந்து வாக்களித்த இளைஞர்களுக்கு நன்றி.

    கட்சியின் வெற்றிக்காக பாடுபட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்களை பாராட்டுகிறேன்.

    இன்று வரை காணப்படும் நல்லாட்சியும் திறமையான நிர்வாகமும் மேலும் மேம்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

    ஆந்திராவில் அதிகபட்ச மாக வாக்குகள் பதிவாகியுள்ளது சந்திரபாபு நாயுடுவுக்கு சாதகமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் நல்லாட்சி நிர்வாகம் மேம்படுத்தப்படும் என ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருப்பது அவரது கட்சியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வீரபத்திர சாமி கோவிலுக்கு ரூ.12.5 லட்சம் நன்கொடை.
    • தேவாரா படத்தின் முதல் சிங்கிள் அச்சம் என்ற பாடலும் வெளியானது.

    திருப்பதி:

    தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தனது 41-வது பிறந்த நாளை முன்னிட்டு ஆந்திராவில் உள்ள செய்யேறு ஸ்ரீ பத்திரகாளி சமேத வீரபத்திர சாமி கோவிலுக்கு ரூ.12.5 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.

    மேலும் அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்காக ஆந்திர பிரதேச முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கினார்.

    ஜூனியர் என்.டி.ஆர் நடித்த தேவாரா படத்தின் முதல் சிங்கிள் அச்சம் என்ற பாடலும் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது.

    இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.

    பிறந்தநாளையொட்டி கோவிலுக்கு ஜூனியர் என்.டி.ஆர். நன்கொடை அளித்திருப்பதை அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

    • 2014-ம் ஆண்டில் 78.41 சதவீத வாக்குகளும், 2019-ல் 79.77 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன.
    • 5,600 வாக்கு மையங்களில் 1200-க்கும் மேற்பட்ட வாக்களார்கள் 6 மணியை தாண்டிய நிலையிலும் டோக்கன் பெற்று வாக்களித்தனர்.

    ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று ஒரே கட்டமாக 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தோராயமான வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்பட்டது.

    இந்த நிலையில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் 81.86 சதவீத வாக்குகள் பதிவானதாக அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி முகேஷ் குமார் மீனா தெரிவித்துள்ளார்.

    EVMs மூலமாக 80.66 சதவீத வாக்குகளும், தபால் வாக்குகள் மூலம் 1.2 சதவீத வாக்குகளும் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி மீனா தெரிவித்துள்ளார்.

    வாக்களிக்க 4.13 கோடி பேர் தகுதியானவர்கள் என்ற நிலையில், 3.33 கோடி பேர் (3,33,40,560) 25 மக்களவை இடங்களுக்கும், 3,33,40,333 பேர் 175 சட்டமனற இடங்களுக்கும் வாக்களித்துள்ளனர்.

    நான்காவது கட்டமாக நடைபெற்ற தேர்தலில் நட்டிலேயே அதிகமாக ஆந்திராவில்தான் அதிக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்த மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான வாக்குப்பதிவு இதுவாகும் என மீனா தெரிவித்துள்ளார்.

    2014-ம் ஆண்டில் 78.41 சதவீத வாக்குகளும், 2019-ல் 79.77 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலமாக (ஆந்திரா + தெலுங்கானா) இருந்தபோது கூட இவ்வளவு அதிகமாக வாக்குகள் பதிவாகவில்லை.

    மக்கள் வாக்களிக்க ஆர்வம் கட்டினர். வெளிநாட்டில் வசிக்கும் பெரும்பாலானோர் தாயகம் திரும்பி தங்களது வாக்குகளை பதிவு செய்தனர் என அதிகாரி தெரிவித்தார். காலை நேரத்தில் வாக்கு சதவீதம் குறைவாக இருந்தது. 4 மணிக்குப் பிறகு அதிக அளவிலான மக்கள் திரணடு வந்து வாக்களித்தனர்.

    5,600 வாக்கு மையங்களில் 1200-க்கும் மேற்பட்ட வாக்களார்கள் 6 மணியை தாண்டிய நிலையிலும் டோக்கன் பெற்று வாக்களித்தனர். 3,500 வாக்கு மையங்களில் நேரம் நீட்டிக்கப்பட்டது. ஒரு மையத்தில் கடைசி வாக்கு புதன்கிழமை (இன்று) அதிகாலை 2 மணிக்கு பதிவானது.

    33 இடங்களில் 350 அறைகளில் வாக்கு எந்திரம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதுவரை மறு வாக்குப்பதிவு தொடர்பாக பரிந்துரை வரவில்லை. ஜூன் 4-ந்தேதி முடிவு அறிவிக்கப்பட இருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லாரி மீது மோதிய விபத்தில் பஸ் தீப்பிடித்தது.
    • இந்த விபத்தில் 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

    அமராவதி:

    ஆந்திர மாநிலம் பபட்லா மாவட்டம் சின்னகஞ்சம் பகுதியில் இருந்து ஐதராபாத் நோக்கி நேற்று இரவு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. அதில் 42 பேர் பயணித்தனர்.

    பல்நாடு மாவட்டம் சில்லக்கல்ரிபேட்டை பகுதியில் இன்று அதிகாலை சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே வந்த லாரி மீது பஸ் மோதி விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் பஸ் முழுவதும் தீப்பற்றியது.

    தீ மளமளவென பரவியதால் பஸ் டிரைவர், பயணிகள் என மொத்தம் 6 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

    விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில், வாக்களித்து விட்டு திரும்புகையில் விபத்து நடந்துள்ளது தெரிய வந்தது.

    • நகரியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு தனது கணவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் மகளுடன் வந்து ரோஜா வாக்களித்தார்.
    • மந்திரியான பிறகு முதல் முறையாக வாக்களித்தது சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் 3-வது முறையாக ரோஜா போட்டியிடுகிறார்.

    இன்று காலை நகரியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு தனது கணவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் மகளுடன் வந்து ரோஜா வாக்களித்தார்.

    எனது சொந்தத் தொகுதியில் ஓட்டு போடுவது மகிழ்ச்சி அளிக்கிறது சந்திரபாபு நாயுடு, லோகேஷ், பவன் கல்யாண், சர்மிளா ஆகியோருக்கு ஆந்திராவில் ஓட்டு இல்லை. அவர்களுக்கு வீடுகள் இல்லை. ஐதராபாத்தில் இருந்து வந்து தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

    இதன் மூலம் அவர்களுக்கு ஆந்திர மக்கள் மீது அன்பு இல்லை என்பது தெரிகிறது. யார் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். எனக்கு நகரி தொகுதி மக்களின் ஆசிர்வாதம் என்றும் உள்ளது.

    3-வது முறையாக என்னை தேர்ந்தெடுக்க தயாராகிவிட்டனர்.

    எனக்கும் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கும் பெண்கள் ஆதரவு அதிகமாக உள்ளது. மீண்டும் ஜெகன்மோகன் ரெட்டியை முதல்-அமைச்சராகவும் என்னை எம்.எல்.ஏ. ஆகவும் தேர்ந்தெடுக்க முடிவு செய்துவிட்டனர். எனது மகள் முதல் முறையாக வாக்களித்தார்.

    மந்திரியான பிறகு முதல் முறையாக வாக்களித்தது சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காயத்ரி மந்திரத்தை அர்ச்சகர்கள் 108 முறை ஓத புஷ்பயாகம் நடந்தது.
    • காணிக்கையாளர்கள் 3 டன் மலர்களை காணிக்கையாக வழங்கினர்.

    திருமலை:

    திருப்பதி கோதண்டராமர் கோவிலில் புஷ்ப யாகம் நடந்தது. அதன் ஒரு பகுதியாக காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை உற்சவர்களான சீதா, லட்சுமணர், கோதண்டராமருக்கு பால், தயிர், தேன், மஞ்சள், சந்தனம், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து 6 மணி வரை கோவிலில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க, விஷ்ணு காயத்ரி மந்திரத்தை அர்ச்சகர்கள் 108 முறை ஓத புஷ்பயாகம் நடத்தப்பட்டது.

    அதில் துளசி, சாமந்தி, கன்னேறு, மல்லிகை, கனகாம்பரம், ரோஜா, தாமரை, அல்லி, மொகலி ரெகுலு என 11 வகையான மலர்கள், 6 வகையான இலைகள் என மொத்தம் 3 டன் மலர்களால் உற்சவர்களான சீதா, லட்சுமணர், கோதண்டராமருக்கு புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடந்தது.

    இந்தப் புஷ்ப யாகத்துக்காக ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த காணிக்கையாளர்கள் 3 டன் மலர்களை காணிக்கையாக வழங்கினர்.

    புஷ்ப யாகம் முடிந்ததும் உற்சவர்களான சீதா, லட்சுமணர், கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    • ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாக்களித்தார்.
    • ஆந்திராவில் முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள் வாக்களித்து வருகின்றனர்.

    நான்காவது கட்டமாக 96 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்ற வருகிறது. மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆந்திராவில் முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள் வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடப்பா தொகுதியின் ஜெயமஹால் அங்கனவாடி வாக்குச் சாவடி எண் 138ல் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாக்களித்தார்.


    இத்தொகுதியில் காங்கிரஸின் ஒய்.எஸ்.சர்மிளா, தெலுங்குதேசம் கட்சியின் சாதிபிரல்லா பூபேஷ் சுப்பராமி ரெட்டி, ஒய்.எஸ்.ஆர்.சி.பி.யின் ஒய்.எஸ்.அவினாஷ் ரெட்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    அப்போது ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, "கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சியைப் பார்த்துவிட்டீர்கள், இந்த ஆட்சியில் பலன் அடைந்ததாக நீங்கள் நினைத்தால், ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் இந்த ஆட்சிக்கு வாக்களியுங்கள்.. என்று அவர் வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்.



    • ஆந்திராவில் 175 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
    • முன்னாள் முதல் மந்திரியான சந்திரபாபு நாயுடு குண்டூர் தொகுதியில் வாக்களித்தார்.

    அமராவதி:

    ஆந்திர மாநில சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்கு ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் 175 சட்டபை தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது.

    முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக பிரபல நடிகரான பவன் கல்யாணுடன் கூட்டணி அமைத்துள்ளார் சந்திரபாபு நாயுடு. மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுடனும் கூட்டணி அமைத்தார்.

    கூட்டணி பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தெலுங்கு தேசம் 144 சட்டசபை தொகுதிகளிலும், பவன் கல்யாண் கட்சியான ஜனசேனா 21 சட்டசபை தொகுதிகளிலும், பா.ஜ.க. 10 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

    மற்றொரு முக்கிய கட்சியான காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்தியா கூட்டணியும் களத்தில் உள்ளது.

    இந்நிலையில், ஆந்திர மாநில சட்டசபை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். முன்னாள் முதல் மந்திரியான சந்திரபாபு நாயுடு குண்டூர் தொகுதியில் வாக்களித்தார்.

    இதேபோல், ஒடிசா மாநிலத்திலும் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது.

    • ஆந்திரா தேர்தல் களத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் vs தெலுங்கு தேசம் இடையேதான் கடும் போட்டி.
    • ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா தலைமையில் தேர்தலை எதிர்கொள்வதால் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    ஆந்திராவில் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 13-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் அன்றைய தினமே தேர்தல் நடைபெறுகிறது.

    ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சர் ஜெகன்மோகனின் சகோதரியுமான ஒய்.எஸ்.சர்மிளா, கடப்பா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    ஆந்திராவில் தற்போது முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பதவி வகித்து வருகிறார். ஆந்திரா சட்டசபை தேர்தல் களத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம்- பா.ஜ.க. - ஜனசேனா மற்றும் காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆந்திரா தேர்தல் களத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் vs தெலுங்கு தேசம் இடையேதான் கடும் போட்டி. கடந்த தேர்தலில் ஒரு இடம் கூட வெல்லாத காங்கிரஸ் இம்முறை ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா தலைமையில் தேர்தலை எதிர்கொள்வதால் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ஷர்மிளா ஆகியோரின் தாயார் விஜயம்மா, எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கடப்பாவில் போட்டியிடும் தனது மகளிற்கு ஆதரவளிக்கும் விதமாக 'ஷர்மிளாவிற்கு ஓட்டு போடுங்கள்' என்று மக்களை வலியுறுத்தி தனது விருப்பத்தை தெரிவித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.



    ×