search icon
என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் வாக்களித்து வருகின்றனர்.
    • பிரபல நடிகர் சையிப் அலி கான் மற்றும் நடிகை கரீனா கபூர் ஆகியோர் வாக்களித்தனர்.

    பாராளுமன்ற தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து வருகிறது.

    5-ம் கட்டமாக இன்று நடைபெற்று வரும் தேர்தல் இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

    அதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வாக்களிப்பு மையத்தில் நடிகர் அமிதாப் பச்சான் மற்றும் அவரது மனைவியும் எம்.பி.,மான ஜெயா பச்சன் ஆகியோர் வாக்களித்தனர்.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீதா அம்பானி ஆகியோர் தனது மகனுடன் வந்து வாக்களித்தனர்.

    பாலிவுட் நடிகர்களான சாரா அலி கான் மற்றும் அம்ரிதா சிங் ஆகியோர் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

    பிரபல பாவுட் நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தனர்.

    இதேபோல், பிரபல நடிகர் சையிப் அலி கான் மற்றும் நடிகை கரீனா கபூர் ஆகியோர் வாக்களித்தனர்.

    தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளின் பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன் தனது குடும்பத்துடன் வாக்களித்துள்ளனர்.

    நடிகை சோனாக்ஷி சன்ஹா அவரது தாய் பூனம் சின்ஹாவுடன் வந்து மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

    நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

    நடிகை அனன்யா பாண்டே, சுங்கி பாண்டே மற்றும் பாவனா பாண்டே ஆகியோர் மும்பை வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

    ஆதித்யா பிர்லா குழுவின் தலைவர் குமார் மங்களம் பிர்லாவும், அவரது மகள் அனன்யா பிர்லாவும் வாக்களித்தனர்.

    நடிகர் அமீர் கான், ரன்பீர் கபூர் ஆகியோர் தனது வாக்கினை செலுத்தினார்.

    கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது மகன் அர்ஜூன் டெண்டுல்கருடன் வந்து வாக்களித்தார்.

    நடிகை தமன்னா மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பிறகு அவர் கூறுகையில், " அனைவரும் வாக்களிப்பதில் ஆர்வகமாக உள்ளனர். வாக்குச்சாவடிகளில் அதிகளவில் மக்களவை பார்க்க முடிகிறது. வாக்களிப்பது நமது கடமை" என்றார்.

    • ஸ்விக்கி ஊழியர் ஒருவர் உணவு டெலிவெரி செய்வதற்காக உள்ளே சென்றார்.
    • ஸ்விக்கி ஊழியருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.

    பொதுவாக நம் ஊரில் திரைப் பிரபலங்கள் பொது இடங்களில் கண்டுவிட்டால் அவர்களை ரசிகர்கள் சூழ்ந்துவிடுவது வழக்கம். சிலர் செல்பி என்ற பெயரில் அவர்களை நச்சரித்துவிடுவார்கள்.

    நடிகர், நடிகைகள் என்றால் வாயடைத்து நிற்பவர்களுக்கு மத்தியில் தனக்கு கடமை தான் முக்கியம் என்று நடிகை எதிரே வந்தும் கண்டும் காணாமல் கடந்து தனது பணியை ஆற்றிய ஸ்விக்கி ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சலூன் ஒன்றுக்கு சென்றுவிட்டு நடிகை டாப்சி பன்னு வெளியே வந்தார். அவரிடம் பேட்டி எடுப்பதற்காக செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் என பலரும் வெளியே நின்று அவரை அழைத்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது, அங்கு வந்த ஸ்விக்கி ஊழியர் ஒருவர் உணவு டெலிவெரி செய்வதற்காக உள்ளே சென்றார். அப்போது, நடிகை டாப்சி ஸ்டைலிஷாக எதிரே வந்தார். ஆனாலும, ஸ்விக்கி ஊழியர் அவரை கண்டுக்கொள்ளாமல் தனது கடமையை செய்ய சென்றார்.

    இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள்," எவ்வளவு பெரிய நடிகை வந்தாலும் தனக்கு கடமை தான் முக்கியம் என்று தனது பணியை செய்யும் ஸ்விக்கி ஊழியருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்" என பாராட்டி வருகின்றனர்.

    23 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ காட்சியை, புகைப்பட கலைஞர் ஒருவர் ஸ்விக்கி பார்ட்னரை டேக் செய்து, ஸ்விக்கி ஊழியரின் கடமையை பாராட்டினார். அதில், "ஹே ஸ்விக்கி, இந்த டெலிவரி பார்ட்னர் தனது அர்ப்பணிப்புக்கு ஊக்கத்தொகைக்கு தகுதியானவர்" என குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த ஸ்விக்கி, "தொந்தரவு இல்லை. நெஞ்சில் ஈரம், மகிழ்ச்சி. என் பாதை. கவனம் செலுத்துகிறது. செழிக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தது.

    • வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடக்கிறது.
    • பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்து மை வைத்த விரலை காண்பித்தார்.

    புதுடெல்லி:

    543 உறுப்பினர்களை கொண்ட இந்திய பாராளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது.

    உலகமே எதிர்பார்க்கும் இந்த தேர்தலில் முதல் 4 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. இதன் மூலம் 379 தொகுதிகளுக்கு தேர்தல் நிறைவடைந்து உள்ளது. இதில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்வான குஜராத்தின் சூரத் தொகுதியும் அடங்கும்.

    இதுவரை நடந்த 4 கட்ட தேர்தல்களின் மூலம் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாராளுமன்ற தேர்தல் நிறைவடைந்து விட்டது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற தென் இந்திய மாநிலங்கள் முக்கியமானவை ஆகும்.

    4 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ள நிலையில் 5-வது கட்டமாக 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது.

    அந்தவகையில் உத்தரபிரதேசம் (14 தொகுதிகள்), மகாராஷ்டிரா (13), மேற்கு வங்காளம் (7), பீகார் (5), ஒடிசா (5), ஜார்கண்ட் (3), ஜம்மு-காஷ்மீர் (1), லடாக் (1) ஆகிய 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த தேர்தல் நடக்கிறது.

    வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடக்கிறது.

    ஏற்கனவே நடந்த 4 கட்ட தேர்தல்களில் மொத்தம் 66.95 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. அடுத்தடுத்த கட்டங்களில் வாக்கு சதவீதத்தை மேலும் அதிரிக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அதன்படி இன்றைய தேர்தலுக்காக வாக்காளர்களிடம் தீவிர விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. குறிப்பாக நகர்ப்புற வாக்காளர்கள் பெருமளவில் வாக்களிக்க வருமாறு தேர்தல் கமிஷன் வேண்டுகோள் விடுத்து உள்ளது.

    இந்நிலையில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். வாக்களித்த பின் அவர் விரலில் உள்ள மை அடையாளத்தை காட்டினார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    எனது இந்தியா வளர்ச்சியடைந்து வலுவாக இருக்க வேண்டும். அதை மனதில் வைத்து வாக்களித்தேன். இந்தியாவிற்கு எது சரி என்று நினைத்து அதற்கு வாக்களிக்க வேண்டும். வாக்களிக்கும் சதவீதம் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார்.

    தொழிலதிபர் அனில் அம்பானி மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்குப்பதிவு தொடங்கும் வரை காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

    ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தனது குடும்பத்துடன் வந்து மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்து மை வைத்த விரலை காண்பித்தார்.

    • விபத்தில், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
    • விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டம் பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் உள்ள சக்கன் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் திடீரென எரிவாயு டேங்கர் வெடித்து விபத்துக்குள்ளானது.

    வெடிப்பின் தீவிரம் மிக அதிகமாக இருந்ததால் அருகில் உள்ள ஓட்டல்கள், வீடுகள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரிகள் கடுமையாக சேதமடைந்தன.

    இந்த விபத்தில், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    வெடித்து விபத்து ஏற்பட்டது தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், எரிவாயு டேங்கரில் சட்டவிரோதமாக எரிவாயு நிரப்பப்பட்டதாகவும், இதனால் வெடி விபத்து ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

    விபத்து தொடர்பாக யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகிறோம் என்றும் பிம்ப்ரி சின்ச்வாட் காவல்துறையின் டிசிபி சிவாஜி பவார் தெரிவித்துள்ளார்.

    • மும்பையில் நடன காவலர் என பெயர் பெற்ற அமோல் காம்ப்ளேவுடன் இணைந்து நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    • வீடியோ வைரலாகி ஆயிரக்கணக்கான பார்வைகளை குவித்து வருகிறது.

    சமூக வலைதளமான டிக்-டாக்கில் உலக அளவில் பிரபலம் ஆனவர் நோயல் ராபின்சன். இவர் சமீபத்தில் மும்பை வந்திருந்தார். அப்போது மும்பையில் அவர் சந்தித்த சிலருடன் நடனம் ஆடிய வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

    அதில் அவர் மும்பையில் நடன காவலர் என பெயர் பெற்ற அமோல் காம்ப்ளேவுடன் இணைந்து நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நோயல் ராபின்சன் ஒரு கொள்ளையன் போல நடிக்கும் காட்சிகள் உள்ளன. அதாவது நோயல் ராபின்சன் சாலையில் முதியவர் ஒருவரிடம் இருந்து போனை பறித்து கொண்டு தப்பிக்கும் போது அவர் போலீஸ்காரர் அமோல் காம்ப்ளே மீது மோதுவது போலவும், பின்னர் இருவரும் நடனம் ஆடும் காட்சிகளும் உள்ளது.

    இந்த வீடியோவுடன் பதிவில், நீங்கள் எங்கிருந்து வந்தாலும் பரவாயில்லை. மும்பை காவல் துறைக்கு முன்னால் நீங்கள் குற்றம் செய்தால் இவ்வாறு முடியும். ஏனென்றால் நாங்கள் மும்பை போலீஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாகி ஆயிரக்கணக்கான பார்வைகளை குவித்து வருகிறது.



    • ஆம் ஆத்மி எம்.பி.யான ஸ்வாதி மாலிவால் விவகாரத்தில் பிபவ் குமார் கைது செய்யப்பட்டார்.
    • இதற்கிடையே, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீடியோ வெளியிட்டு போராட்டத்தை அறிவித்துள்ளார்.

    மும்பை:

    ஆம் ஆத்மி எம்.பி.யான ஸ்வாதி மலிவால் விவகாரத்தில் பிபவ் குமார் கைது செய்யப்பட்டார்.

    இதற்கிடையே, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீடியோ வெளியிட்டு போராட்டத்தை அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக கெஜ்ரிவால் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமருக்கு சொல்கிறேன். ஆத் ஆத்மி கட்சியினர் யாரை வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம். மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் என ஒவ்வொருவராக சிறையில் அடைக்கலாம். மே 19-ம் தேதி மதியம் 12 மணிக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரும் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட போகிறோம். நீங்கள் விரும்பும் அனைவரையும் ஒரே இடத்தில கைது செய்யலாம் என பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில், சிவசேனா எம்.பி.யான சஞ்சய் ராவத் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஆம் ஆத்மியின் பாஜக அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நான் வரவேற்கிறேன். ஜூன் 4-ம் தேதி ஆட்சி மாறப்போகிறது. இன்றும் எதிர்க்கட்சிகளை மிரட்டுவது டெல்லியில் மட்டுமல்ல, மும்பையிலும் நடக்கிறது என தெரிவித்தார்.

    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மனைவி தற்போது நலமாக இருக்கிறார்.
    • இந்த சம்பவம் மே 11 அன்று நடந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மனைவியின் மீது சந்தேகப்பட்டு அவரது பிறப்புறுப்பில் துளையிட்டு பூட்டு போட்டு கொடுமைப்படுத்திய கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மனைவி தற்போது நலமாக இருக்கிறார். அவர் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் மே 16 ஆம் தேதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மே 11 அன்று நடந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேபாளம் நாட்டை சேர்ந்த இந்த தம்பதி வேலை தேடி புனே நகரத்திற்கு குடிபெயர்ந்து வந்துள்ளனர் என்றும் வந்த இடத்தில் மனைவியின் நடத்தையின் மீது சந்தேகப்பட்ட கணவன் அவளது பிறப்புறுப்பை ப்ளேடு வைத்து காயப்படுத்தி, ஆணியால் துளையிட்டு பூட்டு போட்டுள்ளான் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட மனைவியின் வாக்குமூலத்தை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கணவனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மும்பை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னியுடன் ரோகித் சர்மா பேசிக்கொண்டிருந்தார்.
    • அப்போது அவர் கேமராமேனை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டது சமூக வலைதளத்தில் வைரலாகியது.

    மும்பை:

    மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா, மும்பை அணியின் முன்னாள் வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பயிற்சியாளர்களில் ஒருவருமான அபிஷேக் நாயருடன் பேசிய வீடியோவை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தனது சமூக வலைதள பக்கத்தில் கடந்த வாரம் வெளியிட்டது.

    அந்த வீடியோவில், ரோகித் சர்மாவும், அபிஷேக் நாயரும் பேசுவது தெளிவாக கேட்கவில்லை. சில ரசிகர்கள் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரோகித் சர்மா பேசுவதை மட்டும் தனியாக பிரித்து எடுத்தனர். அதில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணி பற்றி பேசி இருப்பது தெரியவந்தது. இதன்மூலம் ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் மீது கடும் அதிருப்தியில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

    இந்த சர்ச்சை வீடியோவை வெளியிட்ட சில நிமிடங்களில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நீக்கிவிட்டது.

    இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த ஐ.பி.எல். போட்டியில் மும்பை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னியுடன் ரோகித் சர்மா பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கேமராமேனை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டார். ஏற்கனவே ஒரு ஆடியோ வெளியாகி சர்ச்சையை உண்டு பண்ணியுள்ளது. எனவே ஆடியோவை ஆப் செய்யுங்கள் என தெரிவித்தார். இதுதொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இந்தியா கூட்டணியை ஆதரித்து மகாராஷ்டிராவில் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரம்.
    • எனக்காக வாக்கு கேட்கவில்லை. இந்தியாவை காப்பாற்றுவதற்காக மன்றாடுகிறேன் என கெஜ்ரிவால் பிரசாரம்.

    இந்தியா கூட்டணியில் இடம் பிடித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் நடைபெற்ற தேர்தல் பேரணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் பேசும்போது கூறியதாவது:-

    நான் எனக்காக வாக்கு கேட்கவில்லை. நாட்டினை பாதுகாக்க எங்களிடம் மன்றாடுகிறேன். பா.ஜனதா வெற்றி பெறாது. ஜூன் 4-ந்தேதி வெற்றி பெற்றால் அது சுப்ரியா சுலே, சரத் பவார், உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரேயை ஆகியோரை ஜெயிலுக்கும் அடைக்கும்.

    ஏழை மக்களுக்கு உயர்தர கல்வி வழங்க பணியாற்றியதால், சுகாதார சிஸ்டத்தை சிறந்ததாக்க முயற்சி மேற்கொண்டதால் பா.ஜனதா என்னை ஜெயிலில் அடைத்தது.

    இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    • மனித குரலில் பேசவும், முக பாவனங்களை புரிந்து கொள்ளவும் கூடிய புதிய ஏஐ மாடலாகும்.
    • 26 மொழிகளில் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும்.

    மும்பை:

    'ஆர்டிபிசியல் இன்டெலி ஜென்ஸ்' எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் புதிய வெர்சன்கள் இன்று உலகம் முழுவதும் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்து வருகிறது.

    ஆரம்பத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறையில் பயன்படுத்தப்பட்ட இந்த தொழில்நுட்பம் நாளடைவில் மருத்துவம், சினிமா, சேவை என பல்வேறு துறைகளிலும் பயன்பாட்டிற்கு வந்து விட்டது.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் புதிய தொழில்நுட்பமான சாட்ஜி பிடி ஓபன் ஏ.ஐ. நிறுவனத் தால் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து சாட்ஜிபிடி-4 வெர்சன் அறிமுகப்படுத்தப்பட்டது. இது முந்தைய சாட்ஜிபிடி வெர்சனை விட கூடுதல் அம்சங்களை கொண்டிருந்தது. இதனால் சாட்ஜிபிடி-4 வெர்சனுக்கு அதிக வரவேற்பு இருந்தது.

    இந்நிலையில் ஓபன் ஏஐ நிறுவனம் 13-ந் தேதி அன்று தங்களது புதிய வெர்சனான சாட்ஜிபிடி-4 ஓ-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.

    இது மனித குரலில் பேசவும், முக பாவனங்களை புரிந்து கொள்ளவும் மற்றும் பேசும் மொழியை பின் நேரத்தில் மொழி பெயர்க்கவும் கூடிய புதிய ஏஐ மாடலாகும்.

    சாட்ஜிபிடி-4ஓ-ல் 25 ஆயிரம் வார்த்தைகள் வரை கேட்க முடியும். அல்லது டாக்மெண்ட் பைல்களை பதிவேற்றம் செய்வதன் மூலமும் கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம்.

    மேலும் ஒரு படத்தை அப்லோடு செய்தும் கேள்விகளை கேட்கலாம். சாட்ஜிபிடியின் பழைய பதிப்பில் ஆங்கிலத்தில் மட்டுமே புரிந்து கொள்ளும் போது, சாட்ஜிபிடி4-ல் 26 மொழிகளில் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும்.

    சாட்ஜிபி–டியின் புதிய வெர்சனான ஜிபிடி-4 ஓ இதுவரை வெளிவந்த வெர்சன்களில் அதிநவீனமாக இருப்பதுடன் மனிதர் களை போலவே பதில் அளிக்கும் என அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், உலகில் இதுவரை கிடைத்திடாத சாட்ஜிபிடி வெர்சன்களில் சிறந்த மாடலை நாங்கள் உருவாக்கி உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

    ஓபன் ஏஐ 3.5 வெர்சன் வரை பயனர்களுக்கு இலவசமாக கிடைக்கிற நிலையில் இந்நிறுவனம் தொடர்ந்து லட்சக்கணக்கான மக்களுக்கு இலவச சேவையை அளிக்கும் என ஆல்ட்மேன் உறுதியளித்து உள்ளார்.

    இதுவரை உரையாடல்கள் வழியாக பதில் அளித்த சாட்ஜிபிடி குரல் மற்றும் காணொலி உள்ளிடு களுக்கு பதில் அளிக்கும் வகையில் மேம்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    சினிமாக்களில் வரும் செயற்கை நுண்ணறிவு போல் உண்மைக்கு நெருக்கமாக செயல்படுவதும் இன்னும் அதிக நுண்ணறிவுடனும், நகைச்சுவை உணர்வுடனும் இந்த புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    அதே நேரம் ஓபன் ஏஐ நிறுவனத்தின் இந்த புதிய வெர்சனால் சில இடையூறுகள் ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

    ஏற்கனவே ஏஐ தொழில்நுட்பம் மூலம் பிரபலங்கள் சிலரின் டீப் பேக் வீடியோக்கள் வெளியான நிலையில் இந்த புதிய வெர்சனால் மேலும் இடையூறுகள் ஏற்படலாம் என அவர்கள் கூறியுள்ளனர்.

    ஆனால் ஜிபிடி-4ஓ பழைய மாடலை விட 2 மடங்கு வேகமானது மற்றும் கணிசமான செயல்திறன் கொண்டது. இதன் மூலம் கேள்விகளுக்கான பதில்களை இணையத்தில் தேடுதல், சாட்போட்டுடன் பேசுதல் மற்றும் பல்வேறு குரல்களில் பதில்களை கேட்பது ஆகியவை இதில் அடங்கும் என அந்நிறுவனத்தின் அதிகாரி மீரா மிராட்டி தெரிவித்துள்ளார்.

    • சந்திரபாபு நாயுடு மகாலட்சுமி கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம்.
    • தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமான அலை ஏற்பட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மகாராஷ்டிரா மாநிலம் கோலாம்பூரில் உள்ள மகாலட்சுமி கோவிலில் அவருடைய குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

    நாட்டையும் நாட்டு மக்களையும் ஆசீர்வதிக்கும் சக்தி வாய்ந்த தெய்வமான மகாலட்சுமி ஆசிர்வாதத்தை பெற நீண்ட காலமாக முடிவு செய்திருந்தேன். அது தற்போது நிறைவேறியுள்ளது. தேர்தலில் வாக்களிக்கும் மக்களுடைய மனநிலை நாடு முழுவதும் நல்ல நிலையில் உள்ளது.

    இதனால் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமான அலை ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம். ஆந்திர மாநிலத்தில் தெலுங்குதேசம் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சரத் பவார் பெயரை குறிப்பிடாமல் மத்திய மந்திரியாக இருந்த காலத்தில் விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை.
    • விவசாயிகளுக்காக ஒன்றுமே செய்யவில்லை. விவசாயிகளை கைவிட்டு விட்டார் என மோடி விமர்சனம்.

    இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் சரத் பவார். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இவர் 2004 முதல் 2014 வரை மத்திய விவசாயத்துறை மந்திரியாக இருந்தவர்.

    பிரதமர் மோடி மகாராஷ்டிரா உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளும்போது, சரத் பவார் பெயரை குறிப்பிடாமல் மத்திய மந்திரியாக இருந்த காலத்தில் விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை. விவசாயிகளுக்காக ஒன்றுமே செய்யவில்லை. விவசாயிகளை கைவிட்டு விட்டார் என விமர்சனம் செய்து வருகிறார்.

    அதற்கு பதிலடியாக நெருக்கடியான நேரத்தில் பிரதமர் மோடிக்கு உதவிய பழைய சம்பவம் ஒன்றை சரத் பவார் நினைவு கூர்ந்துள்ளார்.

    இது தொடர்பாக சரத் பவார் கூறியதாவது:-

    மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது, விவசாயத்துறை பிரச்சனைகளை என்னிடம் வந்து தெரிவித்ததுடன், குஜராத்துக்கும் அழைத்துச் சென்றார். ஒருமுறை அவர் இஸ்ரேலுக்கு செல்ல விரும்பியதால் (தனித்துவமான விவசாய நுட்பங்கள் குறித்து தெரிந்து கொள்ள) அவரையும் அங்கு அழைத்துச் சென்றேன். இப்போது நரேந்திர மோடி என்ன சொன்னாலும் நான் கவலைப்படவில்லை.

    இவ்வாற சரத் பவார் தெரிவித்துள்ளார்.

    மோடி பிரதமரான பின்னர் 2017 ம் ஆண்டு இஸ்ரேல் சென்றார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இஸ்ரேல் சென்ற முதல் பிரதமர் என்ற பெயரை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×