தமிழ்நாடு (Tamil Nadu)

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

Published On 2022-11-09 06:19 GMT   |   Update On 2022-11-09 06:19 GMT
  • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.456 உயர்ந்துள்ளது.
  • கிராம் ரூ.4,758-ல் இருந்து ரூ.4,815 ஆக உயர்ந்து உள்ளது. ஒரே நாளில் கிராம் ரூ.57 அதிகரித்து உள்ளது.

சென்னை:

சென்னையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பவுன் ரூ.37 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. நேற்று பவுன் ரூ.38,064 ஆக இருந்த தங்கத்தின் விலை இன்று ரூ.38,520 ஆக உயர்ந்தது. இன்று ஒரே நாளில் பவுன் ரூ.456 கூடி உள்ளது.

கிராம் ரூ.4,758-ல் இருந்து ரூ.4,815 ஆக உயர்ந்து உள்ளது. ஒரே நாளில் கிராம் ரூ.57 அதிகரித்து உள்ளது.

தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று அதிகரித்து இருக்கிறது. கிராம் ரூ.66.70-ல் இருந்து ரூ.67.40 ஆகவும் கிலோ ரூ.66,700ல் இருந்து ரூ.67,400 ஆகவும் உயர்ந்து உள்ளது. தங்கம் விலை உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News