search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பீமாசங்கர் கோவில்
    X

    பீமாசங்கர் கோவில்

    • புகழ் பெற்ற மராட்டிய மன்னன் சிவாஜியும் இக்கோயிலுக்கு நன்கொடைகள் அளித்துள்ளான்.
    • இப்பகுதியில் உள்ள பிற சிவன் கோவில்களைப் போலவே இதன் கருவறையும் கீழ் மட்டத்தில் அமைந்துள்ளது.

    பீமாசங்கர் கோவில் புனேக்கு அருகில் உள்ள கெட் என்னும் இடத்திலிருந்து வடமேற்கில் 50 கிமீ தொலைவில் உள்ள போர்கிரி என்னும் ஊரில் உள்ளது. இது புனேயில் இருந்து 110 கிமீ தொலைவில் சாஹ்யாத்திரி குன்றுகளில் அமைந்துள்ளது. பீமாஸ்கந்தர் பகுதியிலிருந்தே பீமா ஆறு உருவாகின்றது. இது தென்கிழக்காகச் சென்று ராய்ச்சூருக்கு அருகில் கிருஷ்ணா ஆற்றுடன் கலக்கிறது. இது இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.

    இக்கோயில், சிவன் வெல்லமுடியாத பறக்கும் கோட்டைகளான திரிபுரங்களை எரித்த புராணக்கதையுடன் தொடர்புள்ளது. இப்போருக்குப் பின் சிவனின் உடலிலிருந்து சிந்திய வியர்வையாலேயே பீமாராத்தி ஆறு உருவானது என்பது புராணக்கதை.

    பீமாசங்கரர் கோவில் புதியனவும் பழையனவுமான கட்டிடங்களின் கலவையாக உள்ளது. இக்கட்டிடங்கள் நாகரக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்துள்ளன. மிதமான அளவுள்ள இக்கோவில் 18-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கட்டப்பட்டது. இக்கோவிலின் சிகரம் நானா பட்னாவிஸ் என்பவனால் கட்டப்பட்டது.

    புகழ் பெற்ற மராட்டிய மன்னன் சிவாஜியும் இக்கோயிலுக்கு நன்கொடைகள் அளித்துள்ளான். இப்பகுதியில் உள்ள பிற சிவன் கோவில்களைப் போலவே இதன் கருவறையும் கீழ் மட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் கட்டிடங்கள் ஒப்பீட்டளவில் புதியவையாக இருந்தாலும், பீமாசங்கரம் என்னும் இக்கோவில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×