சனிபகவானுக்கு தனி சன்னதி உருவானது எப்படி?
- தேவர்களை புறக்கணித்து நளனைத் தமயந்தி மணந்தது கேட்டுச் சனிபகவான் நளன் மேல் கோபம் கொண்டார்.
- இத்தலத்து சனி பகவான் சன்னதி மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.
நிடத நாட்டு மன்னனான நளன், விதர்ப்ப நாட்டு வீரசேனன் மகள் தமயந்தியைச் சுயம்வரத்தின் மூலமாக மணந்து கொண்டான்.
தேவர்களை புறக்கணித்து நளனைத் தமயந்தி மணந்தது கேட்டுச் சனிபகவான் நளன் மேல் கோபம் கொண்டார்.
நளனிடம் ஏதும் குறை காணாது 12 ஆண்டுகள் காத்திருந்து, நளன் ஒருநாள் சந்தியா வந்தனம் செய்யும்போது காலில் நீர் பட்டும் படாமலும் கழுவிச் சென்ற குற்றங்கண்டு அவனை பற்றினார்.
இதனால் நளன் கடும் துன்பங்களை அனுபவித்தார். துன்பங்கள் தீர்ந்து நாடாளத் தொடங்கிய பின்னருங்கூட, சனியின் வேகம் தணியாமல் தீர்த்த யாத்திரையை நாரதர் உபதேசப்படி மேற்கொண்டான்.
விருத்தாசலம் சிவ ஆலயத்தில் சந்தித்த பரத்வாஜ முனிவர் திருநள்ளாறு சென்று வழிபடுமாறு அறிவுரை கூறினார்.
அவ்வாறே நளன் திருநள்ளாறு அடைந்து, தீர்த்தம் உண்டாக்கி, நீராடி, இறைவனை வழிபட, திருநள்ளாற்று ஆலயத்துக்குள் நுழைந்தான்.
அவனை பற்றி இருந்த சனி உள்ளே நுழைய அஞ்சி அங்கேயே தங்கி விட்டார்.
இதனால் இத்தலத்து சனி பகவான் சன்னதி மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.