ஆன்மிக களஞ்சியம்

வக்கிரமடையாத கிரகம் சந்திரன்-ஜாதகத்தில் சந்திரன்

Published On 2024-03-28 11:43 GMT   |   Update On 2024-03-28 11:43 GMT
  • இதைப்போல் திருமண பொருத்தமும் சந்திரனை கொண்டே கணக்கிட்டு கூறலாம்.
  • சந்திரன் மேஷம், துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ஆறு ராசிகளில் சமத்துவம் பெறுகிறது.

ஜாதகத்தில் சந்திரனை மாத்ரு காரகன் என்றும், நவக்கிரகங்களிலே சுபக்கிரகன் என்னும் குறிப்பிடுவார்கள்.

ஒருவருடைய ஜாதகத்தில் முற்பிறப்பில் பவுர்ணமி விரதமிருந்து, பூஜை செய்ததன் பலனாக சந்திரன் இருக்கும் இடத்தை வைத்தே அந்த ஜாதகர் தன் தாயை நன்றாக கவனித்துக் கொள்வார்.

கடைசி வரையிலும் தாயை வைத்துக் காப்பாற்றுவார் என்று சொல்லிவிடலாம்.

இதைப்போல் திருமண பொருத்தமும் சந்திரனை கொண்டே கணக்கிட்டு கூறலாம்.

ஜாதகத்தில் சந்திர தசை பத்து வருடம் இருக்கும்.

சந்திரன் மேஷம், துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ஆறு ராசிகளில் சமத்துவம் பெறுகிறது.

ரிஷப ராசியில் உச்சமும், கடகத்தில் ஆட்சியும், விருச்சிகத்தில் நீச்சமும் அடைகிறது.

மிதுனம், சிம்மம், கன்னி ஆகிய ராசிகளுக்கு நட்பாகிறது.

குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, இராகு, கேது பெயர்ச்சி போன்றவற்றுக்கும் சந்திரனை கொண்டே தான் பலன் சொல்லப்படுகிறது.

சந்திரனுக்கு பகையே கிடையாது.

வக்கிரமடையாத கிரகம் சந்திரன். இவனை கொண்டே முகூர்த்தங்கள் நிச்சயிக்கப்படுகின்றன.

Tags:    

Similar News