பைக்

அறிமுகமான 'ஜாவா 350 லெகசி எடிஷன்'... விலை எவ்வளவு தெரியுமா?

Published On 2025-02-22 12:01 IST   |   Update On 2025-02-22 12:01:00 IST
  • டூரிங் வைசர், பில்லியன் பேக்ரெஸ்ட் மற்றும் கிராஷ் கார்டு ஆகிய அம்சங்கள் இந்த மாடலில் உள்ளன.
  • என்ஜினானது 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

350 பைக்கின் லெகசி எடிஷனின் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஜாவா 350 லெகசி எடிஷனை ஜாவா மோட்டோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலின் அறிமுக விலையாக முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு ரூ.1.99 லட்சம் என்று இந்த பைக்கை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு ரூ.16 ஆயிரம் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

டூரிங் வைசர், பில்லியன் பேக்ரெஸ்ட் மற்றும் கிராஷ் கார்டு ஆகிய அம்சங்கள் இந்த மாடலில் உள்ளன. இதனுடன் லெதர் கீசெயின் மற்றும் ஜாவா 350 மினியேச்சர் மாடல் ஒன்றும் லெகசி எடிஷனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது.



இந்த பைக்கில் 22.5hp பவர் மற்றும் 28.1Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய 334 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு என்ஜினே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த என்ஜினானது 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

Tags:    

Similar News