பைக்
ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 மாடலின் லிமிடெட் எடிஷன் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்
- உலகளவில் 100 ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 பைக்குகள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன.
- இந்தியாவிற்கு 25 ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 பைக்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஷாட்கன் 650 மாடலின் லிமிடெட் எடிஷன் பைக்குகள் இந்தியாவில் அறிமுகமாகின.
இந்த பைக் 47bhp ஆற்றலையும் 52.3Nm டார்க் விசையையும் வழங்கும் காற்று மற்றும் எண்ணெய் குளிரூட்டலுடன் கூடிய 649cc பேரலல்-ட்வின் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.
உலகளவில் 100 பைக்குகள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிற்கு 25 பைக்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் ஆரம்ப விலை ₹4.25 லட்சமாக (EX-Showroom) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பைக்கிற்கான முன்பதிவு பிப்ரவரி 12 அன்று இரவு 8:30 மணிக்கு ராயல் என்பீல்ட் செயலி வழியாக தொடங்கும் என்றும் முன்பதிவில் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.