null
இதுக்கு ஒரு END கிடையாதா?.. இணையத்தைக் கலக்கும் ஆலியா பட் DEEP FAKE வீடியோக்கள்
- 'Get ready with me' என்ற ஹேஷ்டேக்குடன் அவை வைரலாகத் தொடங்கியுள்ளன.
- பிரதமர் நரேந்திர மோடியும் டீப் பேக் வீடியோவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அறிவியலின் சமீபத்திய பிரசவமான ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைகளிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். பலதரப்பட்ட நன்மைகளை ஏஐ தொழில்நுட்பம் உள்ளடக்கியிருந்தாலும் மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் அபாயத்தையும் ஏஐ தன்னகத்தே கொண்டுள்ளது.
அந்த வகையில் ஏஐ தொழிநுட்பத்தால் உருவாக்கப்படும் டீப் பேக் வீடியோக்கள் பலரது வாழ்க்கையுடன் விளையாடத் தொடங்கியுள்ளது. வீடியோவில் உள்ளவரின் முகத்துடன் வேறு ஒருவரின் முகத்தை இணைத்து வீடியோவில் உள்ளவர் செய்யும் செயல்களை வேறு ஒருவர் செய்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முடியும். இதைப் பயன்படுத்தி பிரபலங்களின் முகத்தை விரசமான வீடியோக்களில் இணைத்து இணையத்தில் சிலர் உலாவ விடுகின்றனர்.
சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடியும் டீப் பேக் வீடியோவால் பாதிக்கப்பட்டுள்ளார். அதிலிருந்து டீப் பேக்கின் அபாயம் குறித்து தொடர்ந்து அவர் எச்சரித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் டீப் பேக் வீடியோ வெளியாகி இணையத்தைக் கலக்கிக் கொண்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றில் பதிவேற்றப்பட்ட வீடியோக்களில் ஆலியா பட் அலங்காரம் செய்துகொள்வது போல் 'Get ready with me' என்ற ஹேஷ்டேக்குடன் அவை வைரலாகத் தொடங்கியுள்ளன. ஆனால் உண்மையில் அவை டீப் பேக் வீடியோக்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
முன்னதாக நடிகை வாமியா காபியின் முகத்துடன் ஆலியா பட்டின் முகம் டீப் பேக் செய்யப்பட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பிரதமர் மோடி, ராஷ்மிகா மந்தனா மட்டுமின்றி நடிகை கஜோல், கத்ரீனா கைப் உள்ளிட்ட பலரது டீப் பேக் வீடியோக்களும் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.