சினிமா செய்திகள்

அரசியல் சண்டையில் என் பெயரை இழுக்க வேண்டாம்: சமந்தா

Published On 2024-10-03 01:56 GMT   |   Update On 2024-10-03 01:56 GMT
  • எனது விவாகரத்து என்பது என் சொந்த விஷயம். அது பரஸ்பர அங்கீகாரத்துடன் நடைபெற்றது.
  • கொண்டா சுரேகா தயவு செய்து எனது விவாகரத்து பற்றி ஏளனமாக நினைக்க வேண்டாம்.

சமந்தா- நாகசைதன்யா விவாகரத்துக்கு முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகரராவ்வின் மகனுமான கே.டி. ராமாராவ்தான் காரணம் என்று தெலுங்கானா பெண் மந்திரி கொண்டா சுரேகா அளித்த பேட்டி சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பாக கே.டி. ராமாராவ் அவதூறு வழக்க தொடர்வதாக கூறியுள்ளார். இந்த நிலையில் அரசியலுக்கான என் பெயரை இழுக்க வேண்டாம் என சமந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமந்தா கூறியிருப்பதாவது:-

எனது விவாகரத்து என்பது என் சொந்த விஷயம். அது பரஸ்பர அங்கீகாரத்துடன் நடைபெற்றது. விவாகரத்தில் எந்தவித அரசியல் சதியும், குறுக்கீடும் இல்லை. கற்பனைகளை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கொண்டா சுரேகா தயவு செய்து எனது விவாகரத்து பற்றி ஏளனமாக நினைக்க வேண்டாம். அடுத்தவர்களின் சொந்த விஷயங்களைப் பற்றி பேசும்பொழுது பொறுப்பாக இருக்க வேண்டும். தயவுசெய்து என் பெயரை அரசியலுக்கு இழுக்க வேண்டாம். நான் எப்பொழுதும் அரசியலுக்கு அப்பாற்பட்டுதான் இருப்பேன்.

என சமந்தா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நாகர்ஜுனா தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "அமைச்சர் கோண்டா சுரேகாவின் கருத்துக்கு நான் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கையை எதிரிகளை விமர்சிக்கப் பயன்படுத்தாதீர்கள்.

தயவுசெய்து மற்றவர்களின் தனி உரிமையை மதிக்கவும். பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண்ணாக, எங்கள் குடும்பத்திற்கு எதிரான உங்கள் கருத்துக்கள், குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொருத்தமற்றவை, தவறானவை. உங்கள் கருத்துக்களை உடனே திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News