வெப் சீரிஸிற்காக 12 மணி நேரம் தண்ணீரில் நின்ற மனிஷா கொய்ராலா
- முதல்வன், பம்பாய், இந்தியன் உள்பட பல படங்களில் நடித்து முன்னனி நடிகையாக திகழ்ந்தவர் மனிஷா கொய்ராலா.
- சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான வெப் தொடர் ஹிரமண்டி. இந்த தொடர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
முதல்வன், பம்பாய், இந்தியன் உள்பட பல படங்களில் நடித்து முன்னனி நடிகையாக திகழ்ந்தவர் மனிஷா கொய்ராலா. புற்றுநோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்பு மீண்டும் தற்போது சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான வெப் தொடர் ஹிரமண்டி. இந்த தொடர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. தொடரில் பாலியல் தொழில் செய்யும் மல்லிகாஜான் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தியாவின் பிரிவினைக்கு முந்தைய காலத்தில் லாகூர் ஹீர மண்டியின் சிவப்பு விளக்கு பகுதி நிகழ்ச்சியின் பின்னணியாகும். பிரிட்டிஷ் ராஜ் சகாப்தத்தில் இந்திய சுதந்திர இயக்கத்தால் பாலியல் தொழிலாளிகளும் நவாப்புகளும் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பதே இந்த தொடரின் கதை.
சோனாக்ஷி சின்ஹா , அதிதி ராவ் ஹைதாரி, ரிச்சா சதா, ஷர்மின் சேகல், சஞ்சீதா ஷேக், பரிதா ஜலால், சேகர் சுமன், ஃபர்தீன் கான், அத்யாயன் சுமன் மற்றும் ஸ்ருதி ஷர்மா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இது பற்றி மனிஷா கொய்ராலா கூறியதாவது:-
இந்த தொடரில் எனது கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருவது மகிழ்ச்சி. தொடரில் தவறுகள் மீது விமர்சனங்கள் இருந்த போதும் வரவேற்பு பெற்றுள்ளது. படப்பிடிப்பில் 12 மணி நேரம் நீருக்குள் நான் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து நீருக்குள் நின்றதால் களைப்பை தந்தாலும் ஒரு ஆழ்ந்த மகிழ்ச்சியையும் தந்தது.
தண்ணீர் சூடாகவும் சுத்தமாகவும் இருந்தாலும் சில நேரங்களில் சேரும் சகதியும் என் உடலில் ஏறியது. சில சமயங்கள் எனக்கு மன அழுத்தம் கொடுத்தாலும் நெகிழ்ச்சியையும் தந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.