null
தீயாய் பரவிய வதந்தி- முற்றுப்புள்ளி வைத்த சமந்தா தரப்பு
- நடிகை சமந்தா சில தினங்களாக மையோசைட்டிஸ் என்ற நோயில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
- தற்போது அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் பரவின.
நடிகை சமந்தா சில நாட்களுக்கு முன்பு யசோதா பட வெளியீட்டிற்காக ரசிகர்களுடன் பேசிய வீடியோவில் தனக்கு மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக உறுதிப்படுத்தினார். இதற்காக கடந்த 3 மாதங்களாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பதாகவும், இதனால் உயிருக்கு ஆபத்து இல்லையென்றாலும் கடுமையான வலி இருப்பதாகவும் விரைவில் நலம் பெற்று திரும்புவேன் என்றும் கண்ணீர் மல்க கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று சமந்தாவுக்கு நோயின் தாக்குதல் தீவிரமானதால் ஐதராபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் பரவியது. இதனால் திரையுலகில் பரபரப்பு தொற்றி கொண்டது. ஊடகங்கள் பலவும் ஐதராபாத்திலுள்ள மருத்துவமனையில் குவிந்தனர்.
இது தொடர்பாக சமந்தாவின் செய்தி தொடர்பாளர் சார்பில் கூறப்பட்டிருப்பதாவது, சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. வீட்டிலிருந்தே சிகிச்சை எடுத்துக் கொள்கிறார். இப்படி இருக்கையில் இந்த தவறான செய்தி எப்படி பரவியது என்றே தெரியவில்லை. சமந்தா கடந்த 3 வாரங்களாக வழக்கமான பரிசோதனைக்காககூட எந்த மருத்துவமனைக்கும் போகவில்லை என்பதே உண்மை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.