null
இதை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.. ஆஸ்கர் வென்ற இயக்குனர் பதிவு
- 95-வது ஆஸ்கர் விருதில் தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் சிறந்த ஆவணக் குறும்படமாக தேர்வானது.
- சமூக வலைத்தளத்தில் எழுந்த குற்றச்சாட்டுக்கு இயக்குனர் மனம் திறந்துள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் இந்திய சார்பில் சிறந்த ஆவண குறும்படமாக தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் (THE ELEPHANT WHISPERERS) மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடலாக - நாட்டு நாட்டு - கீரவாணி, சந்திர போஸ் (ஆர்.ஆர்.ஆர்) ஆஸ்கர் விருதை வென்றது. இந்த படக்குழுவுக்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலையில் தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற குறு ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது. தாயை பிரிந்த குட்டி யானைகளுக்கும், அந்த யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி என்ற தம்பதியரின் கதையே இந்த தி எலிபெண்ட் விஸ்பரரஸ் ஆவணப்படம். ஆஸ்கர் விருது வென்ற இந்த ஆவணப்படத்தை பொம்மன், பெள்ளி தம்பதிக்கு திரையிட்டு காட்டவில்லை என்ற குற்றச்சாட்டை நிருபர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தின் இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் சமூக வலைத்தளத்தில் மனம் திறந்து பதிவிட்டுள்ளார். அதில், இது சம்மந்தமாக நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியே இந்த ஆவணப்படத்தை என்னால் திரையிடப்பட்டு காட்டப்பட்ட முதல் நபர். அவர்கள் வசிக்கும் காட்டுப்பகுதியில் ஸ்டிரீமிங் சேனல்களை பார்க்கும் வசதி இல்லை என்று பதிவிட்டுள்ளார்.