சினிமா செய்திகள்

மாதவன்

90 சதவீத தகவல்கள் பொய்யானவை.. சர்ச்சைக்குள்ளான மாதவன் திரைப்படம்

Published On 2022-08-27 08:21 GMT   |   Update On 2022-08-27 08:21 GMT
  • நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'.
  • இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்த நிலையில் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படம் அதிக வசூல் ஈட்டியது.


'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'

இந்நிலையில், 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படத்தில் கூறப்பட்ட 90 சதவீத தகவல்கள் பொய்யானவை' என, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த திரைப்படம் குறித்து முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஏ.இ.முத்துநாயகம், இ.வி.எஸ்.நம்பூதிரி, டி.சசிகுமாரன் ஆகியோர் கூறியதாவது, "விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்று சினிமாவில் 90 சதவீதம் தவறான தகவல்கள் கூறப்பட்டுள்ளன.


'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'

இஸ்ரோவில் பணியாற்றி, ஜனாதிபதியாகவும் பதவி வகித்த அப்துல்கலாமின் தவறை திருத்தியதாக கூறியிருப்பது முற்றிலும் தவறான தகவல்.

அதுமட்டுமின்றி, தான் கைது செய்யப்பட்டதால்தான் இந்தியாவுக்கு கிரையோஜெனிக் தொழில் நுட்பம் தாமதமாக கிடைத்தது என்று முற்றிலும் ஆதாரமற்ற தகவலை இந்த திரைப்படத்தில் கூறியுள்ளனர். நாராயணனுக்கும் கிரையோஜெனிக் திட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று கூறினர்.

Tags:    

Similar News