ஆன்மிக களஞ்சியம்

இடம் மாற்றப்பட்ட ஸ்ரீரங்கத்து தேவதையே சமயபுரம் அம்மன்

Published On 2024-12-30 10:47 GMT   |   Update On 2024-12-30 10:47 GMT
  • அப்படி சென்றவர்கள், ஓய்வெடுப்பதற்காக ஒரு இடத்தில் அந்த பல்லக்கை இறக்கி வைத்தனர்.
  • அவ்வாறு இறக்கி வைக்கப்பட்ட இடமே சமயபுரமாகும்.

ஆதியில் சமயபுரத்தாள், ஸ்ரீரங்கத்தில் இருந்ததாகவும் சிலர் கூறுகின்றனர்.

விஜயநகரப் பேரரசின் வலிமை குன்றியபோது பகைவரின் அத்துமீறிய தாக்குதலால் அம்பாளை இடமாற்றம் செய்ய நினைத்துள்ளனர் அன்றிருந்த அன்பர்கள்.

அதற்காக தேவியின் சிலையை பல்லக்கில் ஏற்றி மாற்று இடத்திற்கு தூக்கி சென்றுள்ளனர்.

அப்படி சென்றவர்கள், ஓய்வெடுப்பதற்காக ஒரு இடத்தில் அந்த பல்லக்கை இறக்கி வைத்தனர்.

அவ்வாறு இறக்கி வைக்கப்பட்ட இடமே சமயபுரமாகும்.

ஸ்ரீபாதம் தாங்கிகள் மீண்டும் பல்லக்கை அங்கிருந்து தூக்க முற்பட்டபோது அம்பாளின் திருமேனியை அசைக்கக்கூட இயலாமல் போனதாம்.

அதனால் அம்பாளை வணங்கி அங்கேயே குடியமர்த்தியதாகச் சொல்கின்றனர்.

Similar News