ஆன்மிக களஞ்சியம்

சமயபுரம் மகாமாரி மாரியம்மன்

Published On 2024-12-30 10:41 GMT   |   Update On 2024-12-30 10:41 GMT
  • தேவகியின் குழந்தையாக கிருஷ்ணனும், யசோதையின் குழந்தையாக மாயாதேவியும் த்வாபர யுகத்தில் அவதரித்தனர்.
  • அவ்விரு குழந்தைகளும் இறைவனின் எண்ணத்தினால் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

சமயபுரம் அம்பாளின் தோற்றம் குறித்து பல்வேறு புராதனக் குறிப்புகளும், செவிவழிச் செய்திகளும் நிலவிக் கொண்டிருக்கின்றன.

அவற்றுள் முக்கியமானவற்றை இங்கு காண்போம்.

தேவகியின் குழந்தையாக கிருஷ்ணனும், யசோதையின் குழந்தையாக மாயாதேவியும் த்வாபர யுகத்தில் அவதரித்தனர்.

அவ்விரு குழந்தைகளும் இறைவனின் எண்ணத்தினால் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தேவகிக்கு பிறக்கும் குழந்தைகளைக் கொல்லும் வழக்கமுடைய கம்சன், கடைசியாக அங்கு வந்த (யசோதையின் குழந்தை) பராசக்தியான இளம் குழந்தையைக் கொல்ல முற்பட்டான்.

அப்போது அவன் கரத்திலிருந்து விடுபட்ட பராசக்தி, தனது உண்மைத் தோற்றத்தை அவனுக்கு காட்டி மறைந்தாள்.

பின்னாளில் கண்ண பரமாத்மாவால் கம்சன் சம்ஹாரம் செய்யப்பட்டான்.

இத்தேவியே மகாமாரி என்னும் மாரியம்மனாக மக்களால் பூஜிக்கப்படுகிறாள்.

அநீதியையும் தீமைகளையும் அழித்து மக்களுடைய தீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் அந்த அன்னை மகாமாயியே சமயபுரத்தில் அற்புத அம்மனாக காட்சி தந்து அருள்பாலித்துக் கொண்டுள்ளாள்.

Similar News