ஆன்மிக களஞ்சியம்

விமரிசையாக கொண்டாடப்படும் ஆருத்ரா தரிசனம்

Published On 2024-12-30 12:30 GMT   |   Update On 2024-12-30 12:30 GMT
  • விழாவில் முதல் நாள் மாலை சுவாமி வீதி உலா, வெள்ளை சாத்துப்படி நடைபெறும்.
  • ஈசான மூலையில் சுவாமி அம்பாளை நிற்க வைத்து வெள்ளை துணியை மேலே சாத்தி தீபாராதனை காட்டப்படும்.

ஸ்ரீகாளதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

விழாவில் முதல் நாள் மாலை சுவாமி வீதி உலா, வெள்ளை சாத்துப்படி நடைபெறும்.

ஈசான மூலையில் சுவாமி அம்பாளை நிற்க வைத்து வெள்ளை துணியை மேலே சாத்தி தீபாராதனை காட்டப்படும்.

மறுநாள் அதிகாலை 5 மணிக்கு சூரிய உதயத்திற்கு முன்பு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

அன்று மாலை சிறப்பு நடன தரிசனம் முடிந்து நடராஜர் அம்பாள் ஊடல் நிகழ்ச்சி நடைபெறும்.

பெருமாள், நடராஜரின் ருத்ரதாண்டவத்தை சமாதானப்படுத்துவது ஐதீகம்.

பெருமாள், நடராஜர் இருக்கிற இடத்திற்கு எழுந்தருளி சென்று மரியாதை மற்றும் தீபாராதனை நடைபெறும்.

அப்போது ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கும் வஸ்திரங்கள் சாத்தப்பட்டு தீபாராதனை நடத்தப்படுவது சிறப்பு ஆகும்.

மாலையில் தயிர் பாலாடை உற்சவம் நடைபெறும். நடராஜர் முன்பு தயிர் சாதம் படையலிட்டு சிறப்பு பூஜை நடைபெறும்.

3 நாட்கள் இந்த உற்சவம் நடைபெறும்.

இந்த விழாவில் புதுவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

Similar News