வழிபாடு

மகான்களின் ஜீவ சமாதிகளின் மகத்துவம்

Published On 2023-03-12 14:44 GMT   |   Update On 2023-03-12 14:44 GMT
  • ஜீவ சமாதிகளில், அதிர்வுகள் அதிகமாக இருக்கும்.
  • திருவான்மியூரில் அமைந்துள்ளது ‘ஸ்ரீ பாம்பன் சுவாமிகள்' சமாதி தலம்.

பரம்பொருளுடன் இரண்டறக் கலந்த மகான்களின் ஜீவ சமாதிகளில், அதிர்வுகள் அதிகமாக இருக்கும். அவர்கள் அந்தச் சமாதியில் இருந்து வெளிப்பட்டு அருள்புரிந்து அல்லல் நீக்கியதோடு, உபதேசமும் செய்திருக்கிறார்கள்.

உதாரணம்: நெரூர் என்ற ஊரில் உள்ள 'ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திர சரஸ்வதி சுவாமிகள்'. இவரது ஜீவ சமாதி தலத்தில் போய் அமர்ந்து, சற்று நேரம் தியானம் செய்தால், அலை பாயும் மனது தானே அடங்குவதை உணரலாம்.

அடுத்து; சென்னை-திருவான்மியூரில் அமைந்துள்ள 'ஸ்ரீ பாம்பன் சுவாமிகள்' சமாதி தலம். நம் காலத்திலேயே முருகப்பெருமானைப் பலமுறை நேருக்கு நேராகத் தரிசித்த மகான் இவர். இவருடைய சமாதி தலத்தில் இன்றும் அடியார்கள் பலர் வந்து வழிபட்டு, அல்லல்கள் தீர்வதைப் பார்க்கலாம்.

'சொல்லின் செல்வன்' பி.என்.பரசுராமன்.

Similar News