15 நிமிடத்தில் செய்யலாம் மஷ்ரூம் சுக்கா
- இது நாண், சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.
- மஷ்ரூம் சுக்காவின் சுவை மட்டன் சுவைக்கு நிகராக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
மஷ்ரூம் - 200 கிராம்
வெங்காயம் - 1
சோம்பு - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
தனியா - 1 ஸ்பூன்
வர மிளகாய் - 3
பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பில்லை - 2 கொத்து
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
மஷ்ரூமை அலசி விட்டு ஒரே மாதிரியான அளவில் பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் ஒரு கடாயில் மஷ்ரூமைகளை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வரும் வரை வேக வைத்து அடுப்பில் இருந்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்து மஷ்ரூம்களில் இருக்கும் அதிக தண்ணீரை பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து கடாய் சூடானவுடன் ( வெறும் கடாயில்) மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு, தனியா, வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்துக் கொண்டு அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மிக்சிஜாரில் வறுத்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து அதில் சிறிது வெங்காயமும் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பின் மீதமுள்ள வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரை வதக்கி விட்டு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து அதன் காரத் தன்மை செல்லும் வரை வதக்கி விட வேண்டும்.
மசாலாக்களின் பச்சை வாசனை சென்ற பிறகு, வேக வைத்த மஷ்ரூம்களை சேர்த்து வதக்கி விட்டு, உப்பு தூவி நன்றாக பிரட்டி எடுக்க வேண்டும்.
கலவையில் இருந்து எண்ணெய் பிரிந்து , கலவை சுண்டி வரும் வரை வதக்கி விட்டு பின் அடுப்பில் இருந்து இறக்கி கொத்தமல்லி தூவு பரிமாறவும்.
இப்போது சூப்பரான மணக்க மணக்க மஷ்ரூம் சுக்கா ரெடி!
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health