சமையல்

எள்ளு குழம்பு

Published On 2024-05-16 11:22 GMT   |   Update On 2024-05-16 11:22 GMT
  • எள்ளில் இருக்கிற எண்ணெய் தோலுக்கு நல்ல பளபளப்பு தருது.
  • இத சரியான அளவுல நம்ம உணவுல சேர்த்துக்கிட்டு வந்தோம்னா நம்ம உடம்புக்கு தேவையான பலன்கள் கிடைக்கும்.

எள்ளுல இருபது சதவீதம் புரதமும் 50% எண்ணையும் 16 சதவீதம் மாப்பொருளும் இருக்கு.

இத உடம்புக்கு சேர்த்துட்டு வந்தோம்னா அது உடலுக்கு நல்ல பலத்த கொடுக்கும். அது மட்டும் இல்லாம எள்ளுல இரும்புச்சத்து, துத்தநாகம் இதெல்லாம் அதிகமா இருக்கு.

எள்ளில் இருக்கிற எண்ணெய் தோலுக்கு நல்ல பளபளப்பு தருது.

அதே மாதிரி தோல்ல ஏற்படுற நோய்களான சொரி, சிரங்கு, படை மாதிரியான எல்லா நோய்களையும் எளிதா, விரைவா குணப்படுத்திடும்.

மேலும் ஆன்ட்டி ஆக்சிடென்ட், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், மற்றும் வைட்டமின் ஏ, பி போன்ற சத்துக்கள் எல்லாமே இதுல உள்ளடங்கி இருக்கு.

இத சரியான அளவுல நம்ம உணவுல சேர்த்துக்கிட்டு வந்தோம்னா நம்ம உடம்புக்கு தேவையான பலன்கள் கிடைக்கும்.



தேவையான பொருட்கள்:

எள்ளு - 2 மேஜைக்கரண்டி

வர மிளகாய் - 9

தனியா - 1 மேஜைக்கரண்டி

பச்சரிசி - 1மேசைக்கரண்டி

துவரம் பருப்பு - 1மேசைக்கரண்டி

சீரகம் - 1/2 மேஜைக்கரண்டி

வெந்தயம் - 1/2 மேஜைக்கரண்டி

சின்ன வெங்காயம் - கைப்பிடி அளவு

தக்காளி - 1

கத்திரிக்காய் - 6

முருங்கைக்காய் - 1

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுந்து - 1/2 தேக்கரண்டி

கருவேப்பிலை - 2 கொத்து

நல்லெண்ணெய் - 3 குழி கரண்டி

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் - 1/2 தேக்கரண்டி

பூண்டு - 5 பல்

ஒரு சிறிய லெமன் அளவு புளி கரைத்து கொள்ளவும்

செய்முறை:

முதலில் ஒரு கடாயை வைத்து அதில் வரமிளகாய், தனியா, அரிசி, துவரம்பருப்பு சீரகம், வெந்தயம் எல்லாவற்றையும் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.

பின் எள்ளையும் அதனுடன் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும், இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்

ஒரு கடாயை வைத்து அதில் நல்லெண்ணெயை ஊற்றி கடுகு வெந்தயம் உளுந்து நன்கு வதக்கி கொள்ளவும் பின் வெங்காயம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

பின் கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும் கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீருடன் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்

நன்கு கத்தரிக் காய் முருங்கைக் காய் வேகும் வரை மூடி வைத்து கொதிக்க விட வேண்டும், கொதித்தபின் அதனுடன் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும் தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்

சுவையான எள்ளு குழம்பு தயார்.

Tags:    

Similar News