சமையல்

சூப்பரான வெஜ் மோமோஸ் செய்யலாம் வாங்க...

Published On 2022-10-28 09:19 GMT   |   Update On 2022-10-28 09:19 GMT
  • மோமோஸ் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி.
  • உணவு பிரியர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இதற்கென ஒரு தனி மவுசு உண்டு.

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - ஒரு கப்

வெங்காயம் - 1

கேரட் - 2

முட்டைகோஸ் - அரை கப்

குடைமிளகாய் - 1

சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்

சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், கேரட், முட்டைகோஸ், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் உப்பு, எண்ணெய், கொஞ்சமாக தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 30 நிமிடங்களுக்கு ஊறவிடவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய குடைமிளகாய், கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து நன்றாக வதக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

இறுதியாக, சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் வேகவைத்து இறக்கி வைக்கவும்.

பிசைந்து மாவில் இருந்து சிறிய உருண்டைகளாக எடுத்து பூரி அளவிற்கு தேய்த்து கொள்ளவும்.

இதன் நடுவில், வேகவைத்த காய்களை மசாலாவை வைத்து, அனைத்து பக்கமும் சேர்த்து மூடிவிடவும்.

இதனை, இட்லி குக்கரில் வைத்து 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

சுவையான வெஜ் மோமோஸ் ரெடி..!

Tags:    

Similar News