- கூட்டணியை உறுதிப்படுத்த பிரதான கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
- தற்போதைய நிலையில் பா.ம.க. எந்த கூட்டணியில் சேரும் என்பதில் இன்னும் தெளிவான முடிவு இல்லை.
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் கூட்டணியை உறுதிப்படுத்த பிரதான கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஆனால் இன்னும் கூட்டணியில் இடம் பெறுவதில் சில கட்சிகள் நழுகியும், வழுகியும் பிடி கொடுக்காமல் இருப்பதால் விட்டுப்பிடிக்கும் மன நிலையில் தலைவர்கள் இருக்கிறார்கள்.
தற்போதைய நிலையில் பா.மக. எந்த கூட்டணியில் சேரும் என்பதில் இன்னும் தெளிவான முடிவு இல்லை. தனது கட்சியினரிடம் 'அவசரப்படாதீர்கள். பொறுமையாக இருங்கள்' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
வட மாவட்டங்களை மனதில் கொண்டு பா.ம.க.வை கூட்டணியில் சேர்க்க தி.மு.க.வுக்கும் விருப்பம் இருக்கிறது. ஆனால் பா.ம.க. இடம் பெற்றால் நாங்கள் வெளியேறுவோம் என்று விடுதலை சிறுத்தைகளும் முரண்டு பிடிக்கின்றன.
இந்த நிலையில் இப்போது தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் 'பா.ம.க. இடம் பெறும் கூட்டணியில் நாங்கள் இடம் பெறமாட்டோம் என்று கூறி இருக்கிறார்.
எனவே அப்படி ஒரு சூழ்நிலைவந்தால் வேல்... வேல்... வெற்றிவேல் என்று அ.தி.மு.க.வை நோக்கி வேல்முருகன் புறப்படுவார் என்கிறார்கள்.