மூளை சிகிச்சை : சத்குரு ஜக்கி வாசுதேவ் 'டிஸ்சார்ஜ்'
- இந்நிலையில்,ஜக்கி வாசுதேவ் தற்போது பூரண குணமடைந்து உள்ளார்.
- இதையொட்டி இன்று மாலையில் மருத்துவமனையில் இருந்து ஜக்கி வாசுதேவ் டிஸ்சார்ஜ் ஆனார்.அவர் நலமுடன் காரில் ஏறி புறப்பட்டார்
கோவை 'ஈஷா' யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் கடும் ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து சிடி ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, அவரது மூளையில், ரத்த கசிவு இருப்பது கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், ஜக்கி வாசுதேவ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு கடந்த 17- ந்தேதி மூளை பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
கடந்த 10 நாட்களாக மருத்துவமனை கண்காணிப்பு சிகிச்சையில் இருந்தார். ஜக்கி வாசுதேவ் நலமுடன் இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈஷா அறக்கட்டளை சார்பில் அதிகாரபூர்வமாக அறிவித்து வீடியோ ஒன்றும் வெளியானது.அதில் சத்குருவின் உடல்நிலை முன்னேற்றம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,ஜக்கி வாசுதேவ் தற்போது பூரண குணமடைந்து உள்ளார்.இதையொட்டி இன்று மாலையில் புதுடெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ஜக்கி வாசுதேவ் டிஸ்சார்ஜ் ஆனார்.அவர் நலமுடன் நடந்து சென்று காரில் ஏறி புறப்பட்டார்
அப்போலோ மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் சங்கீதாரெட்டி சத்குருவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
ஈஷா அறக்கட்டளை சார்பில் வெளியிட்ட அறிக்கையில் 'சத்குருவிற்கு சிறப்பான சிகிச்சை அளித்த டாக்டர் வினித் சூரி, டாக்டர் பிரணவ் குமார், டாக்டர் சுதீர், டாக்டர் எஸ். சாட்டர்ஜீ மற்றும் அப்போலோ மருத்துவமனையின் ஒட்டு மொத்த குழுவிற்கும் ஈஷா அறக்கட்டளை மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறது". என்று கூறி உள்ளது.