இந்தியா

அசாம் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு

Published On 2024-01-23 10:37 GMT   |   Update On 2024-01-24 10:35 GMT
  • இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாவது நடைப்பயணம் மணிப்பூரில் தொடங்கியது.
  • அசாம் முதலமைச்சரின் உத்தரவின் பேரில், ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் தலைமையில் இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாவது நடைபயணம் 'பாரத் நீதி யாத்திரை' என்ற பெயரில் மணிப்பூரில் தொடங்கியது. மும்பை வரை இந்த யாத்திரையை மேற்கொண்டு மார்ச் 20 ஆம் தேதி வரை நடத்தவுள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பாஜக அரசு ராகுல் காந்தியின் நடைப்பயணத்திற்கு பல்வேறு இடையூறுகளை கொடுப்பதாக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், ஜோராபட்டில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியை அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கவுகாத்திக்குள் ராகுல் காந்தி நுழைய முற்பட்டபோது போலீசார் தடுப்புகள் அமைத்து அவரை நுழைய விடாமல் தடுத்தனர். இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த நிலையில் ராகுல் காந்தி மீது அசாம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கவ்ஹாத்தியில் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதால் மக்களை போராட்டம் நடத்த ராகுல் காந்தி தூண்டியதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உத்தரவின் பேரில், ராகுல் காந்தி மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜக அரசைக் கண்டித்தும், முதல்வரை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News