இந்தியா
அசாமில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து
- போகோ நகர் அருகே சிங்ரா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டது.
- இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மேற்கு வங்காள மாநிலம் அசன்சோல் பகுதியில் இருந்து சரக்கு ரெயில் ஒன்று அசாமின் காம்ரூப் பெருநகர மாவட்டத்தில் உள்ள திதெலியா நகருக்கு நிலக்கரி ஏற்றி சென்றுக் கொண்டிருந்தது.
இந்நிலையில், இந்த ரெயில், போகோ நகர் அருகே சிங்ரா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டது.
இதில், 20 பெட்டிகள் தடம் புரண்டன. மொத்தம் 60 பெட்டிகள் கொண்ட அந்த சரக்கு ரெயிலின் மத்திய பகுதியில் இருந்த பெட்டிகளே தடம் புரண்டு உள்ளன.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை என்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று ரெயில்கள் மீண்டும் இயக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.