இந்தியா

மூக்கை கொண்டு வேகமாக தட்டச்சு... 3-வது முறையாக உலக சாதனை படைத்த இந்தியர்

Published On 2024-06-01 03:23 GMT   |   Update On 2024-06-01 03:23 GMT
  • சவுத்ரி "இந்தியாவின் தட்டச்சு மனிதர்" என்று அழைக்கப்படுகிறார்.
  • வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மூக்கை கொண்டு வேகமாக தட்டச்சு செய்து உலக கின்னஸ் சாதனை படைத்த இந்தியர் 3-வது முறையாக தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளார்.

44 வயதான வினோத் குமார் சவுத்ரி என்பவர் 2023-ம் ஆண்டு தனது மூக்கை கொண்டு 27.80 வினாடிகளில் ஆங்கில எழுத்துக்களை தட்டச்சு செய்து சாதனை புரிந்தார். மேலும் அதே ஆண்டில் இரண்டாவது முறையாக அவர் 26.73 வினாடிகளில் தட்டச்சு செய்து சாதனை செய்தார்.

இந்நிலையில் இந்த முறை வினோத் குமார் சவுத்ரி வெறும் 25.66 வினாடிகளில் தட்டச்சு செய்து சாதனையை முறியடித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சாதனை தொடர்பாக வினோத் குமார் சவுத்ரி கூறுகையில், எனது தொழில் தட்டச்சு செய்வதாகும், அதனால்தான் அதில் ஒரு சாதனை செய்ய நினைத்தேன். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எத்தனை பிரச்சனைகளை எதிர்கொண்டாலும், உங்கள் ஆர்வத்தை கடைசி வரை வைத்திருக்க வேண்டும். சாதனைக்காக மணிக்கணக்கில் பயிற்சி செய்தேன். தனது மூக்கால் தட்டச்சு செய்வது சில சமயங்களில் நட்சத்திரங்களைப் பார்க்கும் அளவுக்கு மயக்கத்தை உண்டாக்கும். ஆனால் போதுமான பயிற்சியால் எல்லாம் சாத்தியமாகும் என கூறினார்.

சவுத்ரி "இந்தியாவின் தட்டச்சு மனிதர்" என்று அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News