இந்தியா

தெலுங்கானா-ல நீங்க என்ன செஞ்சீங்கனு சொல்லுங்க.. கே.சி.ஆர்.-க்கு ராகுல் காந்தி கேள்வி

Published On 2023-11-26 10:21 GMT   |   Update On 2023-11-26 10:21 GMT
  • ஊழல் செய்யும் அரசாங்கத்தை கே. சந்திரசேகர ராவ் நடத்தி வருகிறார்.
  • சந்திரசேகர ராவின் குடும்பத்தினர் வசம் தான் உள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

அந்த வகையில், அந்தோல் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிராசார கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, தெலுங்கானா முதலமைச்சர் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் கே. சந்திரசேகர ராவ்- தனது கட்சி மாநிலத்திற்காக என்ன செய்துள்ளது என்பதை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், நாட்டிலேயே மிகவும் ஊழல் செய்யும் அரசாங்கத்தை கே. சந்திரசேகர ராவ் நடத்தி வருகிறார். இவரது ஆட்சியில் பணம் கொட்டும் இலாகாக்கள் அனைத்தும் சந்திரசேகர ராவின் குடும்பத்தினர் வசம் தான் உள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதோடு காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் ஆட்சிக்கு வந்ததும், காங்கிரஸ் அளித்திருக்கும் ஆறு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சட்டம் முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே இயற்றப்பட்டு விடும், அவை நிறைவேற்றப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

"தெலுங்கானாவில் தற்போது நில பிரதிநிதித்துவ அரசு மற்றும் மக்கள் அரசிடையேயான போட்டி நிலவி வருகிறது. உங்களது முதலமைச்சர் காங்கிரஸ் கட்சி என்ன செய்திருக்கிறது என கேட்கிறார். ஆனால், காங்கிரஸ் என்ன செய்தது என்பதை விட, கே சந்திரசேகர ராவ் என்ன செய்திருக்கிறார் என்பதே கேள்வியாக இருக்க வேண்டும்," என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

Similar News