குவைத் தீ விபத்து: உயிரிழந்த இந்தியர்களுக்கு கேரளா முதல்வர் அஞ்சலி
- இந்திய விமானப் படை விமானம் மூலம் இன்று கொச்சி கொண்டு வரப்பட்டது.
- கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அஞ்சலி செலுத்தினார்.
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 தமிழர்கள் உள்பட 45 இந்தியர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 31 பேர் உடல்கள் இந்திய விமானப் படை விமானம் மூலம் இன்று கொச்சி கொண்டு வரப்பட்டது.
கொச்சியில் இருந்து உயிரிழந்தவர்களின் சடலங்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு தனி வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில், கொச்சி விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் உடல்களுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேரின் உடல்களும் கொச்சி விமான நிலையத்தில் தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. பிறகு, தமிழர்களின் உடல்கள் தனி வாகனம் மூலம் கொண்டுவரப்படுகிறது.
#WATCH | Ernakulam: Kerala CM Pinarayi Vijayan, MoS MEA Kirti Vardhan Singh and other ministers pay homage to the mortal remains of the victims of the fire incident in Kuwait, at Cochin International Airport. pic.twitter.com/LvcbBEmQm8
— ANI (@ANI) June 14, 2024