இந்தியா

கட்கரி சார், சாலையை சரிசெய்யும் வரை சுங்க கட்டணம் வசூலிக்காதீர்கள்- வைரலாகும் எம்.எல்.ஏ.-வின் வீடியோ

Published On 2024-06-14 11:46 GMT   |   Update On 2024-06-14 11:46 GMT
  • நெடுஞ்சாலைத்துறை மந்திரியாக நிதின் கட்கரி உள்ளார்.
  • சாலைகள் மோசமாக இருக்கும் நிலையில், கட்டணம் வசூலிப்பது சரியா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலானோர் இந்த சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். சில நேரங்களில் சாலைகள் மிகவும் மோசமாக இருக்கும் நிலையில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் விமர்சனம் செய்வதும் உண்டு.

நீதிமன்றங்களும் அடிக்கடி சாலையை சரிசெய்யும்வரை கட்டணம் வசூலிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் மிகவும் மோசமான சாலையை படம் பிடித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட எம்எல்ஏ மரினால் சைகியா "சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் 37 தேசிய நெடுஞ்சாலை... கட்கரி சார், தயது செய்து சாலையை சரிசெய்யும் வரை, ராஹா டோல் கேட்டின் செயல்பாட்டை நிறுத்தி வையுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

நிதின் கட்கரி சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மத்திய மந்திரியாக உள்ளார். ஏற்கனவே மோடியின் 2.0 அமைச்சரவையில் இதே துறையின் மந்திரியாக இருந்தார். தற்போதும் அதே துறையின் மந்திரயாக பதவி ஏற்றுள்ளார்.

Tags:    

Similar News