இந்தியா

தேசிய பூங்காவில் 'ஹாரிபாட்டர்' பாம்பு

Published On 2024-07-11 05:53 GMT   |   Update On 2024-07-11 06:29 GMT
  • மேஜிக் போன்ற பச்சை நிறத்தில் உள்ளது என பதிவிட்டுள்ளார்.
  • காசிரங்கா பூங்காவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்த பாம்புகள் குறித்த படங்கள் வலைதளங்களில் பரவி வருகிறது.

உலக அளவில் பிரபலமான ஹாரிபாட்டர் தொடரின் சலாசர் ஸ்லிதரின் என்ற கதாபாத்திரத்தின் பெயரால் பெயரிடப்பட்ட சலாசர் பிட் வைப்பர் என்ற அரிய வகை விஷப்பாம்பு அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான புகைப்படங்களை அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா ஷர்மா தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது பதிவுடன், 'என்ன குழந்தைகளே? நிஜ வாழ்க்கையில் ஹாரிபாட்டர் பாம்பு காசிரங்கா பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூப்பர் கூல் சலாசர் பிட் வைப்பரை சந்தியுங்கள். இது மேஜிக் போன்ற பச்சை நிறத்தில் உள்ளது' என பதிவிட்டுள்ளார்.

சலாசர் பிட் வைப்பர் பாம்பு இந்தியாவில் முதன் முதலில் கடந்த 2019-ம் ஆண்டு அருணாசல பிரதேசத்தின் மேற்கு மலைப்பகுதிகளின் தாழ்வான பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது காசிரங்கா பூங்காவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்த பாம்புகள் குறித்த படங்கள் வலைதளங்களில் பரவி வருகிறது.

Tags:    

Similar News