காங்கிரசின் வீழ்ச்சியும்-பா.ஜனதாவின் எழுச்சியும்: 2024 பாராளுமன்ற தேர்தலை நினைத்து எதிர்க்கட்சிகள் கலக்கம்
- 2024 பாராளுமன்ற தேர்தலில் மோடியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அணி திரண்டு வருகின்றன.
- பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி ஒரு மகா கூட்டணியை உருவாக்க திட்டமிட்டு உள்ளனர்.
* நடைபயணம் சென்று கொண்டி ருக்கும் ராகுல்...
* பா.ஜனதாவுக்கு எதிராக அணி திரளும் எதிர்க்கட்சிகள்....
* தேர்தல் போர் களத்தில் இரண்டு முறை மோதியும் யாராலும் வீழ்த்த முடியாத சக்தியாக பா.ஜனதா....
இந்த சூழ்நிலையில் 2024 பாராளு மன்ற தேர்தல் முடிவு எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு எல் லோரிடமும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் உத்தரபிரதேசம், தெலுங்கானா, பீகார், மராட்டியம் மாநிலங்களில் 7 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவை எதிர்க்கட்சிகள் ஆர்வமுடன் எதிர்பார்த்தன.
அதில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்று தன்னை வீழ்த்த முடியாத சக்தியாக பாரதீய ஜனதா நிரூபித்து இருப்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
உ.பி.யின் கோலாலோகரநாத், அரியானாவின் ஆதம்பூர், பீகாரின் கோபால்கஞ்ச், மொகமா, ஒடிசாவின் தாம்நகர், தெலுங்கானாவின் முனு கோடு, மராட்டியத்தின் அந்தேரி கிழக்கு ஆகிய 7 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.
பொதுவாக இடைத்தேர்தல் முடிவுகள் அடுத்து வரும் பொது தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை நாடி பிடித்து கணிப்பதாகவே இருக்கும்.
அதன்படி இந்த தேர்தல் முடிவுகள் பா.ஜனதாவுக்கு தொடர் எழுச்சி, காங்கிரசுக்கு தொடர் வீழ்ச்சி, மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சி என்ற வகை யிலேயே அமைந்துள்ளது.
உ.பி.யின் கோலாலோகரநாத் தொகுதியில் பா.ஜனதா 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது தொகுதியை மீண்டும் தக்க வைத்துள்ளது.
அரியானாவின் ஆதம்பூர் காங்கிரஸ் தொகுதி. இந்த தொகுதியில் பா.ஜனதா 16 ஆயிரம் வாக்குகள் வித்தி யாசத்தில் வென்றுள்ளது.
பீகாரின் கோபால்கஞ்ச் தொகுதி யில் 1,700 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதா வென்று தனது தொகுதியை தக்க வைத்துள்ளது.
இதே போல் அந்த மாநிலத்தின் மற்றொரு தொகுதியான மொகமாவில் ஆர்.ஜே.டி. கட்சி 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
ஒடிசாவின் தாம்நகர் தொகுதியில் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தி யாசத்தில் பா.ஜனதா வென்று தனது தொகுதியை தக்க வைத்துள்ளது.
தெலுங்கானா முனுகோடு தொகுதி காங்கிரஸ் தொகுதி. இந்த தொகுதியில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி வெற்றி பெற்றுள்ளது.
மராட்டியத்தின் அந்தேரி கிழக்கு தொகுதியில் சிவசேனா வென்று உள்ளது. இங்கு பா.ஜனதா போட்டி யிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 7 தொகுதிகளின் இடைத் தேர்தல் முடிவுகளும் காங்கிரசுக்கு பின்னடைவையே கொடுத்துள்ளது. அரியானாவின் ஆதம்பூர் தொகுதியை பா.ஜனதாவிடமும், தெலுங்கானாவின் முனுகோடு தொகுதியை தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியிடமும் பறி கொடுத்துள்ளது.
பறி கொடுத்தது மட்டுமல்ல காங்கி ரஸ் 23,384 வாக்குகள் பெற்று 3-வது இடத்தையே பிடித்துள்ளது. 2-வது இடத்தை பிடித்த பா.ஜனதாவுக்கும் காங்கிரசுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 63 ஆயிரத்து 384 என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநிலத்திலும் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இல்லாத ஒரு அணியை உருவாக்குவதில் சந்திர சேகரராவ் தீவிரமாக இருக்கிறார்.
செல்வாக்குடன் இருந்த காங்கிரசின் செல்வாக்கு மிகவும் சரிந்துள்ளதால் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி யுடன் மல்லுகட்ட பா.ஜனதா தயாராகி விட்டதாகவே பார்க்கப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கையின் போதும் இந்த இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்தது. கடைசியில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி வெற்றி பெற்றது.
பா.ஜ.க. கடந்த தேர்தலில் 12,275 ஓட்டுகள் மட்டுமே பெற்றிருந்தது. இடைத்தேர்தலில் கடந்த தேர்தலை விட 74 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக பெற்றுள்ளது.
தெலுங்கானாவில் ராகுல் நடை பயணத்தில் பெரிய அளவில் கூட்டம் திரண்டது. எனவே தேர்தலில் தெலுங் கானா ராஷ்டீரிய சமிதிக்கு காங்கிரஸ் கடும் நெருக்கடியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது.
ஆனால் காங்கிரஸ் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டு சீனிலேயே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே ராகுல்காந்தி தலைவராக பதவி ஏற்று பாராளுமன்ற தேர்தலை சந்தித்த போது காங்கிரஸ் ஆட்சிைய இழந்தது. இப்போது கட்சி சீரமைக்கப் பட்டு புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிலையில் காங்கிரஸ் தன்னி டம் இருந்து 2 தொகுதிகளை இழந்து மீண்டும் மிகப்பெரிய சரிவை சந்தித்து உள்ளது.
மோடியின் செல்வாக்கு தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருப்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.
மோடியை வீழ்த்த எதிர்கட்சிகள் எத்தனையோ வியூகங்களை வகுத்தும், அஸ்திரங்களை கையில் எடுத்தும் எந்த பலனும் இல்லை.
2024 பாராளுமன்ற தேர்தலில் மோடியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அணி திரண்டு வருகின்றன. பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி ஒரு மகா கூட்டணியை உருவாக்க திட்டமிட்டு உள்ளனர்.
ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து மகா கூட்டணியை உருவாக்கி பா.ஜனதாவை கடுமையாக எதிர்த்தன. ஆனாலும் 2-ல் ஒரு தொகுதியை பா.ஜனதா வென்றது. எனவே இந்த மகா கூட்டணி தேசிய அளவில் எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்று கலக்கம் அடைந்துள்ளார்கள்.
இதற்கிடையில் குஜராத் மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது. 182 தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 1 மற்றும் 5-ந்தேதி களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தொடர்ந்து 6 முறை இந்த மாநிலத் தின் ஆட்சியை தக்க வைத்துள்ள பா.ஜனதா இந்த தேர்தலிலும் தக்க வைக்க கடுைமயாக போராடும். பிரதமர் மோடி அந்த மாநிலத்தில் நேற்று பிரசாரத்தை தொடங்கினார்.
பா.ஜனதாைவ எதிர்த்து காங்கிரசும் மல்லு கட்டுகிறது. கியாஸ் சிலிண்டர் ரூ.500, ரூ.10 லட்சம் வரையிலான விவ சாய கடன்கள் தள்ளுபடி, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என்று கவர்ச்சிகரமான வாக்குறுதி களையும் அளித்துள்ளது.
இந்த முறை கூடுதலாக ஆம் ஆத்மி யும் களம் இறங்கி இருக்கிறது.
இதே போல் 68 உறுப்பினர்களை கொண்ட இமாச்சல பிரதேச தேர்த லும் வருகிற 12-ந்தேதி நடக்கிறது. கவர்ச்சிகரமான இலவசங்களுடன் பா.ஜனதா தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி உள்ளது.
காங்கிரசும் மக்களை கவரும் வகை யில் வாக்குறுதிகளை வழங்கி உள்ளது. அதே நேரம் கருத்துக் கணிப்புகள் பா.ஜனதாவுக்கு சாதகமாகவே உள்ளன. பா.ஜனதா 131 முதல் 139 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் இமாச்சல பிரதேசத்தில் பா.ஜனதா 37 முதல் 45 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் 21 முதல் 29 தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியாகி இருக்கும் இடைத்தேர்தல் முடிவுகளும் இந்த மாநில தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.