விளையாட்டு (Sports)

கார் பந்தய அணியை வாங்கிய சவுரவ் கங்குலி

Published On 2024-07-12 08:43 GMT   |   Update On 2024-07-12 08:43 GMT
  • வளர்ந்து வரும் மோட்டார்ஸ்போர்ட் ரசிகர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்திய ரேசிங் திருவிழா 2024 போட்டிகள் வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் நடைபெற உள்ளது.

இந்திய ரேசிங் திருவிழா 2024 போட்டிகள் வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த கார் பந்தய திருவிழா இந்தியன் ரேசிங் லீக் (ஐஆர்எல்) மற்றும் பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் (எஃப் 4 ஐசி) ஆகிய இரண்டு சாம்பியன்ஷிப்களை உள்ளடக்கியதாகும்.

இந்த போட்டியில் கொல்கத்தா ராயல் டைகர்ஸ் எனும் அணி அறிமுகமாகிறது. இந்த அணியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி வாங்கி உள்ளார். கொல்கத்தா ராயல் டைகர்ஸ் அணியுடன் ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கோவா, கொச்சி, அகமதாபாத் என மொத்தம் 8 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன.

இந்திய பந்தய விழா, ரேசிங் புரமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உருவாக்கியது. இந்தியாவின் வளர்ந்து வரும் மோட்டார்ஸ்போர்ட் ரசிகர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News