தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை ஏற்றி கொடிப்பாடலை அறிமுகப்படுத்தினார் விஜய்- லைவ் அப்டேட்ஸ்
- தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் நடக்க இருக்கிறது.
- பாதுகாப்பு காரணம் கருதி குறைந்த அளவு நிர்வாகிகளே கூட்டத்தில் பங்கேற்க கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.
சென்னை:
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கை, சின்னம் குறித்து முக்கிய அறிவிப்புகளை விஜய் வெளியிட இருக்கிறார்.
மாநாட்டுக்கு முன்பாக தொண்டர்கள் மத்தியில் தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக்கொடியை விஜய் அறிமுகம் செய்ய இருக்கிறார். இதற்காக பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் 45 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை அன்று இந்த கொடிக்கம்பத்தில் மஞ்சள் நிறத்துடன் தனது உருவம் பொறிக்கப்பட்ட கொடியை விஜய் ஏற்றி ஒத்திகை பார்த்தார்.
இந்த நிலையில், கட்சியின் கொடி அதிகாரபூர்வமாக இன்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஏற்றி வைக்கப்படுகிறது. நிர்வாகிகள் மத்தியில் கட்சிக்கொடியை விஜய் அறிமுகம் செய்து, கொடியை ஏற்றி வைக்கிறார்.
இந்த விழாவில் கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் பிரசார பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்படுகிறது.
பாதுகாப்பு காரணம் கருதி குறைந்த அளவு நிர்வாகிகளே கூட்டத்தில் பங்கேற்க கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பங்கேற்க வரும் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு கட்சி அலுவலகத்திற்கு வர இருக்கிறார். காலை 9.15 மணிக்கு கொடியை ஏற்றி வைக்கிறார்.
தவெக கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியதில் பெருமை, கொடிக்கான விளக்கத்தை விரைவில் சொல்வேன்- விஜய்
தவெக கட்சியின் கொடியை கொடியாக மட்டும் நான் பார்க்கவில்லை, தமிழ்நாட்டின் வருங்கால எதிர்காலமாகவே பார்க்கிறேன்- நடிகர் விஜய்
நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் என தொண்டர்களிடம் கூறினார் நடிகர் விஜய்
தமிழக மக்களின் வெற்றிக்கான ஒரு கொடியாக தவெக கொடி அமையும்- விஜய்
ஒரு அரசியல் கட்சியாக தமிழக மக்களுக்காக உழைக்க தயாராவோம்- விஜய்
தவெக மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. விரைவில் மாநாட்டுக்கான தேதி அறிவிக்கப்படும்- விஜய்
அரசியல் பயணத்தை தொடங்கி பிப்ரவரி மாதம் கட்சியை அறிவித்தேன். அப்போதில் இருந்து இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன்.
என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நாம் அனைவரும் இணைந்து உழைப்போம் என்று விஜய் கூறினார்.
தவெக கொடியை அறிமுகப்படுத்தி கொடிப்பாடலை வெளியிட்டு தலைவர் விஜய் பேசினார்.
பனையூரில் தவெக தலைமை அலுவலகத்தில் கட்சி பாடல் ஒலிக்கப்பட்டபோது நிர்வாகிகள் ஆர்ப்பரித்தனர்.