தமிழ்நாடு

மின்சார ரெயில் நிறுத்தம்.. சென்னையில் நாளை மெட்ரோ சேவை நீட்டிப்பு

Published On 2023-10-30 13:26 GMT   |   Update On 2023-10-30 13:26 GMT
  • தெற்கு ரெயில்வேயின் மின்சார ரெயில் சேவை நிறுத்தம்.
  • சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை கூடுதலாக இயக்கப்படுகிறது.

சென்னையில் நாளை மின்சார ரெயில் சேவை நிறுத்தப்படுவதால் மெட்ரோ ரெயில்கள் கூடுதலாக இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

பராமரிப்பு பணிகள் காரணமாக தெற்கு ரெயில்வே சேவைகள் நாளை காலை 10.18 மணி முதல் மதியம் 14.45 மணி வரை மின்சார ரெயில் சேவை நிறுத்தப்படுகிறது. இதன் காரணமாக பயணிகள் பாதிக்கப்படுவதை குறைக்கும் நோக்கில், சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை கூடுதலாக இயக்கப்படுகிறது.

நீட்டிக்கப்பட்ட சேவை விவரம்:

நீல வழித்தடம்: விம்கோ நகர் பணிமனை - விமான நிலையம் மெட்ரோ வரை காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 6 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ - வண்ணாரப்பேட்டை மெட்ரோ வரை காலை 08.00 முதல் 11.00 முதல், மாலை 05.00 முதல் இரவு 08.00 மணி வரை 3 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது.

பச்சை வழித்தடம்: அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ - புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமசந்திரன் சென்ட்ரல் நிலையம் வரை காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 6 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.

புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமசந்திரன் சென்ட்ரல் நிலையம் - பரங்கிமலை மெட்ரோ வரை காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 12 நிமிடங்கள் இடைவெளியில் ரெயில் இயக்கப்படுகிறது.

புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமசந்திரன் சென்ட்ரல் நிலையம் - விமான நிலையம் (வழி- கோயம்பேடு) மெட்ரோ வரை காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 12 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட இருக்கிறது.

Tags:    

Similar News