தமிழ்நாடு செய்திகள்

மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக சென்னையில் திருமண மண்டபம்- நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் உறுதி

Published On 2022-11-17 15:27 IST   |   Update On 2022-11-17 15:27:00 IST
  • மக்கள் நீதி மய்யம் கட்சிக்கென தனி திருமண மண்டபத்தை கட்டலாம் என நான் முடிவெடுத்துள்ளேன்.
  • தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களது இல்ல நிகழ்ச்சிகளையும் இந்த மண்டபத்திலேயே நடத்திக் கொள்ளலாம்.

சென்னை:

மக்கள் நீதி மய்ய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் கட்சிக்காக சென்னையில் திருமண மண்டபம் கட்டி தருவேன் என்று உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது:-

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கென தனி திருமண மண்டபத்தை கட்டலாம் என நான் முடிவெடுத்துள்ளேன். சென்னையிலேயே இந்த திருமண மண்டபத்தை கட்டி தர என்னால் முடியும். இதுபோன்ற கட்சி கூட்டங்களை நாம் அங்கேயே நடத்திக் கொள்ளலாம். தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களது இல்ல நிகழ்ச்சிகளையும் இந்த மண்டபத்திலேயே நடத்திக் கொள்ளலாம். விரைவில் திருமண மண்டபம் தொடர்பான ஆயத்த பணிகளை தொடங்குவோம்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசியுள்ளார்.

Tags:    

Similar News