தமிழ்நாடு

தமிழகத்தில் 1½ லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதி தேர்வில் 86 சதவீதம் பேர் தோல்வி

Published On 2022-12-23 06:12 GMT   |   Update On 2022-12-23 06:12 GMT
  • அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய 24.7.2022 முதல் 27.7.2022 வரை ஏற்கனவே வாய்ப்பு வழங்கப்பட்டது.
  • ஆசிரியர் தகுதி தேர்வில் 86 சதவீதம் பேர் தோல்வி அடைந்து உள்ளனர்.

சென்னை:

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 2022-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த அக்டோபர் மாதம் 14-ந் தேதி முதல் 19-ந்தேதி வரை நடைபெற்றது. தாள் 1-க்கான இந்த தேர்வுகள் கணினி வழியில் தினமும் இரு வேளைகளில் நடத்தப்பட்டது.

இந்த ஆசிரியர் தகுதி தேர்வில் மொத்தம் 1 லட்சத்து 53 ஆயிரத்து 233 தேர்வர்கள் கலந்து கொண்டனர். இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த 2-ந்தேதி அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் 21 ஆயிரத்து 543 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

அதாவது ஆசிரியர் தகுதி தேர்வில் 86 சதவீதம் பேர் தோல்வி அடைந்து உள்ளனர்.

அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய 24.7.2022 முதல் 27.7.2022 வரை ஏற்கனவே வாய்ப்பு வழங்கப்பட்டது. எனவே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள தற்போது அளிக்கும் கோரிக்கையின் மீது ஆசிரியர் தேர்வு வாரியம் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தற்போது விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் சமர்ப்பித்த விவரங்களின் அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் சான்றிதழை நேற்று முதல் பதிவிறக்கம் செய்து வருகிறார்கள்.

3 மாதங்கள் வரை சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.

மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கான ஆசிரியர் தேர்வை 1 லட்சத்து 53 ஆயிரத்து 233 பேர் எழுதி இருந்த நிலையில் அதில் 21 ஆயிரத்து 543 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News