தமிழ்நாடு செய்திகள்

களத்தில் இறங்குவதற்கு கமல்ஹாசன் யோசனை- மூத்த நிர்வாகிகளிடம் கருத்து கேட்கிறார்

Published On 2023-01-19 10:50 IST   |   Update On 2023-01-19 11:05:00 IST
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களத்தில் இறங்குவதற்கு கமல்ஹாசன் யோசனை செய்து வருகிறார்.
  • கமல்ஹாசன் மூத்த நிர்வாகிகளுடன் விரைவில் ஆலோசனை செய்து கருத்து கேட்க முடிவு செய்துள்ளார்.

சென்னை:

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற பிப்ரவரி மாதம் 27-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் பல்வேறு கட்சிகளும் போட்டியிட மும்முரம் காட்டி வருகின்றன.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஏற்கனவே நடந்த தேர்தல்களில், தனித்தும், கூட்டணி அமைத்தும் போட்டியிட்டது. ஆனால் அந்த கட்சியால் வெற்றி பெற முடியவில்லை.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களத்தில் இறங்குவதற்கு கமல்ஹாசன் யோசனை செய்து வருகிறார்.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி இன்னும் உறுதியான முடிவை எடுக்கவில்லை. தேர்தல் களத்தில் இறங்குவதற்கு கமல்ஹாசன் யோசனையில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் மூத்த நிர்வாகிகளுடன் விரைவில் ஆலோசனை செய்து கருத்து கேட்க முடிவு செய்துள்ளார். ஆலோசனைக்கு பிறகு அவர் தனது முடிவை அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News