தமிழ்நாடு

மெட்ரோ ரெயில்கள் நள்ளிரவு வரை இயக்க ஆலோசனை

Published On 2023-06-06 07:25 GMT   |   Update On 2023-06-06 07:25 GMT
  • மற்ற நேரத்தில் 20 முதல் 30 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.
  • மெட்ரோவில் தினமும் காலை 5 மணிக்கு ரெயில் சேவை தொடங்கி இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது.

சென்னை:

சென்னை விமான நிலையம் - விம்கோ நகர் இடைேய, மெட்ரோ தடத்தில், அலுவலக நேரத்தில் 5 நிமிடங்களுக்கு ஒரு ரெயிலும், மற்ற நேரத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரெயிலும் இயக்கப்படுகிறது.

அதே போல் பரங்கிமலை - சென்ட்ரல் இடையே அலுவலக நேரத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரெயில், மற்ற நேரத்தில் 20 முதல் 30 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. மெட்ரோவில் தினமும் காலை 5 மணிக்கு ரெயில் சேவை தொடங்கி இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது.

ஆனால் சென்னை விமான நிலையத்தில் இரவு 11 மணிக்கு மேல் 20க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்பட்டு செல்கின்றன. எனவே தற்போது உள்ள மெட்ரோ ரெயில் சேவையை நள்ளிரவு 12 மணிவரை நீடித்து இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறுகையில், பயணிகளின் தேவைக்கு ஏற்ப இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இச்சேவையை நள்ளிரவு வரை நீட்டித்து இயக்குவது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றனர்.

Tags:    

Similar News