இன்று மதியத்திற்குள் சீரான மின்விநியோகம் வழங்கப்படும்- அமைச்சர் செந்தில் பாலாஜி
- சென்னையில் மட்டும் 1,100 மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- இன்று மதியத்திற்குள் 100% முழுமையாக மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயல் இரவு 2.30 மணி அளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதன் எதிரொலியால், சென்னையில் பலத்த காற்று வீசியது. இதனால் ஆங்காங்கே மரம், மின் வயர்கள் அறுந்து விழுந்தன.
இதற்கிடையே, புயலின் தாக்கத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பல்வேறு இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. மின் வயர் அறுந்து மின் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று பிற்பகலுக்குள் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் மின்விநியோகம் வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மேலும், சேதம் அடைந்த மின்கம்பங்கள் குறித்து மின்வாரியம் சார்பில் ஆய்வு நடத்தி வருகிறது என்றும், இன்று மதியத்திற்குள் 100% முழுமையாக மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னையில் மட்டும் 1,100 மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.