தமிழ்நாடு

கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு அவசியம் ஏற்படவில்லை- அமைச்சர் ரகுபதி

Published On 2024-06-22 06:34 GMT   |   Update On 2024-06-22 06:34 GMT
  • அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை ஒருவாரம் சஸ்பெண்ட் செய்தனர்.
  • யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் எந்த பொறுப்பில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.

சென்னை:

சட்டசபை வளாகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* சட்டசபையை முடக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார்.

* கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியது அப்பட்டமான பொய்.

* அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை ஒருவாரம் சஸ்பெண்ட் செய்தனர்.

* யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் எந்த பொறுப்பில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.

* கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக அரசு உண்மையை மறைக்கவில்லை.

* பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளிலும் தோல்வி அடைந்ததால் சபையை முடக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்.

* கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு அவசியம் ஏற்படவில்லை. உரிய முறையில் சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

* சாத்தான்குளம் விவகாரத்தில் அப்போதைய முதல்வரே உண்மையை மறைத்தார். நாங்கள் இப்போது எதையும் மறைக்கவில்லை.

* நாங்கள் ஏன் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு துணைபோக வேண்டும்? அதனால் எங்களுக்கு என்ன ஆதாயம்?

* கள்ளச்சாராயத்தை தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மெத்தனால் கலவையால் தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

* கள்ளுக்கடைகளை தற்போது திறக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அவசியம் ஏற்பட்டால் பின்னர் பார்க்கலாம்.

* டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றது பற்றி தகவல் தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News