தமிழ்நாடு

உலக பத்திரிகை சுதந்திர நாள் இன்று...

Published On 2024-05-03 06:59 GMT   |   Update On 2024-05-03 06:59 GMT
  • ஜனநாயகத்தின் 4- வது தூணான பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாப்பது அனைத்து தரப்பினரின் கடமை
  • உலகில் அனைத்து பத்திரிகையாளர்களும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு பத்திரிகை மற்றும் ஊடகத்தின் பயன்பாடு தற்போது அதிகரித்து வருகிறது. மேலும் உலக மக்களை இணைக்கும் மிகப் பெரும் பாலமாக பத்திரிகை மற்றும் ஊடகம் செயல்படுகிறது.

பல்வேறு நாடுகளில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் பத்திரிகை, ஊடகங்கள் மிருந்த வளர்ச்சி அடைந்து வருகின்றன.இதன் மூலம் தகவல் பரிமாற்றம் எளிதாகி உள்ளது



இந்நிலையில் உலக பத்திரிகை சுதந்திர நாள் இன்று (மே -3 ந்தேதி ) கொண்டாடப்படுகிறது. இந்த தினம் உருவான வரலாறு குறித்த தகவல் வருமாறு :-

கொலம்பியா நாட்டின் பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசா 1986 -ம் ஆண்டு டிசம்பர் 17 - ந்தேதி அவரது அலுவலகம் முன் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை விசாரித்த நீதிபதிகளும் கொல்லப்பட்டனர். இந்த கொலைக்கு பின்னர் பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு உலகம் முழுவதும் வலுப்பெற்றது. 




இதைத்தொடர்ந்து உலக பத்திரிகையாளர்களின் தொடர் முன்னெடுப்புகள் காரணமாக 1993 -ம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்று கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மே 3- ந் தேதி பத்திரிகை சுதந்திர நாள் கொண்டாடப்படுகிறது.

2016 -ல் 133 வது இடத்தில் இருந்த இந்தியாவின் தரவரிசை, 2022- ம் ஆண்டில், 150 -வது இடத்திற்கு சரிந்துள்ளது .




இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்த பிரபல பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

தற்போது வரை சில பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு மிரட்டல் விடுக்கப்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்து உள்ளது. 




ஜனநாயகத்தின் 4- வது தூணான பத்திரிக்கை சுதந்திரத்தை பாதுகாப்பது அனைத்து தரப்பினரின் கடமை ஆகும். பத்திரிகை சுதந்திர தினமான இன்று உலகில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

Tags:    

Similar News